search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ritika Singh"

  • 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது
  • ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது

  ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்'  படத்தின் படப்பிடிப்புகள் தென் தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் இதன் படப்பிடிப்புகள் நடந்தது.

  இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

  இந்நிலையில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

  இப்பதிவில், லெஜெண்ட்ரி தலைவர் ரஜினிகாந்த் அவருடைய அருளும், அவரது ஆத்மாவும், அவரது இருப்பும் நிஜமாகவே நிகரற்றது. இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

  • ‘காலணித் திருவிழா 2024’ நிகழ்ச்சியை நடிகை ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

  சென்னையில், பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 'காலணித் திருவிழா 2024' என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.


  இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.


  இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரித்திகா சிங், "நான் விளையாட்டை விடமாட்டேன். என் வாழ்க்கையில் சினிமாவிற்கும் விளையாட்டிற்கும் ஒரே அளவு முக்கியத்துவத்தை கொடுப்பேன். பெண்கள் பலர் விளையாட்டிற்கு வரவேண்டும். இது உங்களை உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக்கும். இதனால் நீங்கள் அதிக வலிமை கொண்டவர்களாக மாறுவீர்கள்" என்று பேசினார்.

  மேலும், ரஜினி சார் ஒரு லெஜண்ட் என்று கூறினார். ஞான்வேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பிரிஜ்பூஷன் உறவினர் தலைவராக தேர்வானதைக் கண்டித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்றார் சாக்‌ஷி மாலிக்.
  • மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

  இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

  இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.


  இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' என கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.

  நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நடிகை ரித்திகா பல படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


  இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ரஜினியின் 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில், நடிகை ரித்திகா சிங்கிற்கு இந்த படத்தின் படப்பிடிப்பின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரித்திகா சிங், "ஓநாய் மனிதனுடன் சண்டை போட்டது போலாகி விட்டது. படப்பிடிப்பின்போது கண்ணாடி இருக்கிறது என்று அனைவருமே எச்சரித்த போதிலும், நிலைதடுமாறி அதில் விழுந்து காயமடைந்துவிட்டேன்.


  காயமடைந்த ரித்திகா சிங்

  கண்ணாடி துகள்கள் ஆழமாக இறங்கிவிட்டன. சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் பெற்ற பின்னர் படப்பிடிப்பில் பங்கேற்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ரித்திகா சிங் வேகமாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • நடிகை ரித்திகா சிங் பல படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.

  கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


  இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


  இந்நிலையில், ரித்திகா சிங் தனது சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.
  • மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள்.

  பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

  புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


  போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள். அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர். கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

  மேலும், அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாயித், பதக்கங்களை ஆற்றில் வீச வேண்டாம் என்றும், நடவடிக்கை எடுப்பதற்காக இறுதி அவகாசம் கொடுக்கலாம் என்றும் கூறினார். அத்துடன் பதக்கங்களை வாங்கிச்சென்றார். இதனால் கடைசி நேரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மனம் மாறி போராட்டத்தை கைவிட்டனர்.


  ரித்திகா சிங் பதிவு

  இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

  நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் `பாக்ஸர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

  இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

  மார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

  தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் குத்துச்சண்டை நடிகை நடிக்க இருக்கிறார். #Boxer #ArunVijay
  அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தடம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அடுத்ததாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். 
  ×