என் மலர்

  நீங்கள் தேடியது "Boxer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாக்ஸர் படத்துக்காக 8 மணி நேரம் இடைவிடாமல் அருண் விஜய் பயிற்சி எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் படம் ‘பாக்ஸர்’. இந்த படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக அவர் செய்யும் தீவிர பயிற்சிகளின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. 

  இதுகுறித்து படத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, "அருண் விஜய் ஒரு மாத கால நீண்ட பயிற்சியில் இருந்தார். நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதில் அருண் விஜய் ஒரு பரிபூரணவாதி என்று அனைவருக்கும் தெரியும். நம் "பாக்ஸர்" படத்திற்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

  பீட்டர் ஹெயின் மாஸ்டர் பரிந்துரைக்கு இணங்க, வியட்நாமில் உள்ள லின் பாங்கில் பயிற்சி பெற்றார். அருண் விஜய் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து அங்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் மிகவும் கூலாக இருந்தார். 

  அருண் விஜய் கடினமான முயற்சிகள் எடுக்கும் இந்த வீடியோ, இதுவரை நாங்கள் செய்ததைப் பற்றிய ஒரு பார்வை மட்டுமே. இன்னும் கடுமையான பயிற்சிகளின் வீடியோக்கள் நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வீடியோவை ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்காக வழங்க விரும்பினோம். நான் ரசிகர்கள் என்று சொல்வது அவரது படங்களை மட்டும் பார்ப்பவர்களை அல்ல, அவரை போலவே உடற்பயிற்சி செய்து அவரை தொடர்ந்து பின்பற்றுபவர்களையும் தான்" என்றார்.  ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்து கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். தற்போது அவரது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார். திட்டமிட்டபடி, இந்த ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிக்க இருக்கிறார்கள்.

  இந்தப் படம் ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையை பற்றியது. ரித்திகா சிங் இந்த படத்தில் ஒரு விளையாட்டு பத்திரிகையாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக சூர்யா வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
  அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்து வருகிறார்.  ஜானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் `பாக்ஸர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
  அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ', விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  மேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

  இந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

  மார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடம் படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் குத்துச்சண்டை நடிகை நடிக்க இருக்கிறார். #Boxer #ArunVijay
  அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தடம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து அடுத்ததாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் கிக்-பாக்ஸரான இவர், இறுதிச்சுற்று படத்திலும் பாக்ஸராக நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டோப் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து போலீசில் சரண் அடைந்தார். #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer
  பாரீஸ்:

  பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்யக்கோரி வார இறுதிநாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படும் இந்த போராடம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வலுப்பெற்றது.

  மேலும் கடந்த வார போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் போலீசாரை சரமாரியாக குத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

  இந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கிறிஸ்டோப் பெட்டிங்கர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்' நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Boxer #ArunVijay
  அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான `செக்கச்சிவந்த வானம்' நல்ல வரவேற்பை பெற்றது. அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக `தடம்' ரிலீசாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

  இதுதவிர அருண் விஜய் `வா டீல்', `சாஹோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் `அக்னிச் சிறகுகள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

  இந்த நிலையில், அருண் விஜய்யின் பிறந்தநாளான நேற்று அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. `பாக்ஸர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்குகிறார்.


  அருண் விஜய் பாக்ஸராக நடிக்கும் இந்த படத்திற்கு லியோன் இசையமைக்க, மார்குஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மதன் படத்தொகுப்பையும், பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எலெக்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #Boxer #ArunVijay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரத்ததானம் செய்யும் குத்துச்சண்டை வீரர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானதாக அவரது உறவினர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.#SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
  தூத்துக்குடி:

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

  அது பற்றிய விவரம் வருமாறு:-

  தூத்துக்குடி புஷ்பாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 22) துப்பாக்கி சூட்டில் பலியானார். ரஞ்சித்குமார் பற்றி இவருடைய சித்தப்பா ஆறுமுகம் கூறியதாவது:-

  ரஞ்சித்குமார் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் குத்துச்சண்டை வீரரும் ஆவார். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.

  மேலும் ரத்ததானம் செய்வதில் ஆர்வமாக உள்ளவர். பலமுறை ரத்ததானம் செய்துள்ளார். இதற்காக தனியார் அமைப்பு ஒன்று அடுத்த மாதம் (ஜூன்) ரஞ்சித்குமாருக்கு விருது வழங்குவதற்காக அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூட்டில் துரதிஷ்டவசமாக ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

  துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ரஞ்சித்குமார் உடலை பெற்றுக் கொள்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா (55) என்பவரின் மனைவி செல்வமணி கூறியதாவது:-

  எனது கணவர் கட்டிட தொழிலாளி. அவருக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் அவர் இந்த சம்பவத்தில் பலியாகி விட்டார். எனது கணவரோட ஆசை ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்.

  இந்த மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை கொடுத்து உள்ளார்.

  எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும். எனது கணவரை சுட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளான். அவனை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று தெரியவில்லை.

  இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

  தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகையில், “துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தடியடியில் காயம் அடைந்ததாக சொல்லும்படி போலீசார் வற்புறுத்துகின்றனர்.

  தடியடியில் காயம் அடைந்தவர்களை கலவரத்தின்போது கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறுமாறும் சொல்கிறார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் உங்கள் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்றனர். #SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
  ×