என் மலர்
நீங்கள் தேடியது "Blood Donation"
- கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்தார்.
சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, " பிறந்த நாளில் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் ஊரில் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இரத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது.
உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் Love You என்று தான் சொல்ல வேண்டும்.
மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மீண்டும் வேட்டி அணிந்து மீசை முறுக்கி நடிக்க இருக்கிறேன் " என்றார்.
- தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி
- நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர்த்து நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரைக்கும் 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்திருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்றில்லாமல் பொது மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் இந்த செயலால் நடிகர் கார்த்தி நெகிழ்ந்து ரசிகர்களை பாராட்டி இருக்கிறார்.
- 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.
- கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி சார்பில் காரமடையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி காரமடை தலைவர் மகேஷ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார், செயலாளர் சௌமியாசதீஷ் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- நல்ல மருது நினைவு நாளை முன்னிட்டு 200 பேர் ரத்ததானமும், 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- இதனை முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம்
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியில் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி ரத்தம் கொடுத்து ரத்த தானத்தை தொடங்கி வைத்தார்.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக நல்ல மருதுவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் போஸ் முத்தையா, பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர் வாசு, சோலையழகுபுரம் கண்ணன், வக்கீல் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கவுதம் போஸ், விஷ்ணுவரதன், ஆதித்யா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.
- முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
- 70 பேர் ரத்ததானம் செய்தனர்.
தாராபுரம் :
தாராபுரத்தில் இன்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,கவுன்சிலர்கள் ,கிளைக் கழக செயலாளர் உட்பட 70 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ,நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் ,வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் ,யூசுப் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கருப்பம்புலம் அரசு மருத்துவமனை, கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.
முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நிலவழகி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பிரபாகரன், பேராசிரியர் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மாரிமுத்து, மாணவ- மாணவிகள் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 51 யூனிட் ரத்தம் பெறப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் மாணவ- மாணவிகளுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
- விழாவில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
சுவாமிமலை:
இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் சார்பில் விவேகானந்தா கலாம் பவுண்டேசன் மற்றும் கும்பகோணம் ரெட்கிராஸ் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன் வழிகாட்டுதல் படி ரத்த தான முகாம் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் வரவேற்றார்.
நேருயுவகேந்தி ராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ஸ்ரீராம கிருஷ்ணர் மடத்தலைவர் ஸ்ரீவிமூர்தானந்தா மஹரிஷி முன்னிலை வகித்தார்.
கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்குவித்து விருது வழங்கினார்.
கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ வாழ்த்துரை வழங்கினார்.
கும்பகோணம் போர்டர் ஹால் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜயகுமார், ரவிராமன் கும்பகோணம் ரெட்கிராஸ் தொண்டர்கள் சிவக்குமார், சபாபதி கலந்து கொண்டனர்.
கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர்சிவந்தி, சலீம் ஆகியோர் முகாமில் ரத்த தான ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இறுதியாக டாக்டர் சலீம் நன்றி கூறினார்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
- சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் பாரூக் வரவேற்றார்.
ரத்ததான முகாமை பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் எஸ்.குமார், தி.மு.க. பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கணபதிபாளையம் சிவசுப்பிரமணியம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
- காரைக்காலில் சிறப்பு ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
- 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பெருந்தலை வர் காமராஜர் அரசு பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரியின் பேராசிரியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரி யர்கள் பிரவின்குமார், ஞான முருகன். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவன்பஷீர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் மற்றும் மன்சூர் வின்சென்ட், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
- பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்.
சீர்காழி:
சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பார்வைக்கோர் பயணம் என்ற தலைப்பில் கண்தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சீர்காழி லயன்ஸ் சங்கம், கொள்ளிடம் லயன்ஸ்சங்கம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வ ரன்கோயில், திருவெண்காடு லயன்ஸ் சங்கங்கள், வீரத்தமிழர் சிலம்பாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி சண்முகவேல் தலைமை வகித்தார்.
சீர்காழி சங்கத்தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்தானம், ரத்ததானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சக்திவீரன் நன்றிக்கூறினார்.
- ம.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம்
ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், பரமக்குடி நகரசபை துணைத் தலைவருமான குணா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
முன்னதாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் ஏற்பாட்டிலும், கேணிக்கரை பகுதியில் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி ஏற்பாட்டிலும், பரமக்குடி நகர் பகுதியிலும் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் செய்திருந்தார்.
- ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
- உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று மனிதச் சங்கலி நடைபெற்றது.
இதில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
பாராட்டு நிகழ்ச்சி
தொடர்ந்து மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் ஆண்டுக்கு 3 முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 125 முறை ரத்த தானம் வழங்கிய டவுன் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 50 பேருக்கு சான்றித ழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
பின்னர் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ரத்த தானம் செய்வது தொடர் பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
ரத்த வங்கி துறை எனக்கு பிடித்த துறை. காரணம் நான் மருத்துவம் படிக்கும் போது ஆப்சனல் பாடமாக ரத்த வங்கி துறையைத்தான் தேர்வு செய்தேன். அரிதான ரத்த பிரிவுகள் உட்பட இன்றைக்கு ரத்தம் இல்லா மல் ஒரு உயிரிழப்புகள் நிகழாது என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. அதற்கு காரணம் ரத்த கொடையாளர்கள் தான்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ரத்தம் கிடைக்கிறது. அதுவும் ரத்த கொடையாளர்கள் மூலமாகவே கிடைக்கிறது. மகப்பேறு கால உயிரிழப்புகளை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.
மகப்பேறு காலத்தில் தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுவதில் ரத்த கொடையாளர்களின் பங்கும் முக்கியமானது. சமூக அக்கறையுடன் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவதால் உயிரிழப்பு களை படிபடியாக குறைத்து வருகிறோம்.
இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் என வளர்ந்து இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு அடிப்படையே இந்த ரத்த தானம்தான். இதற்காக தமிழக மக்கள் ரத்ததான கொடையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளா ர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
நிகழ்ச்சியின் போது நெல்லை அரசு மருத்துவ மனையின் ரத்த வங்கி துறை தலைவர் டாக்டர் மணிமாலாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.
அப்போது டாக்டர் மணிமாலா பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் கடந்த 22 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிரிழ ப்புகள் கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 38 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் காப்பாற்றப்ப ட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) லதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.






