search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரத்தில் நகர்மன்ற தலைவர் - நகர செயலாளர் ரத்ததானம்
    X

    தி.மு.க.வினர் ரத்ததானம் செய்த காட்சி.

    உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரத்தில் நகர்மன்ற தலைவர் - நகர செயலாளர் ரத்ததானம்

    • முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .
    • 70 பேர் ரத்ததானம் செய்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் இன்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது .

    தாராபுரம் அரசு பொது மருத்துவமனையில் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,கவுன்சிலர்கள் ,கிளைக் கழக செயலாளர் உட்பட 70 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் ,நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் ,வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர் ,யூசுப் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×