என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National welfare work"

    • ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலத்திட்டப் பணிகள் சிறப்பு முகாம் திருக்கோளூர் கிராமத்தில் நடைபெறுகிறது
    • பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலதிட்டப்பணியாக கோவிலை சுற்றி தூய்மை பணியினை செய்தார்கள்

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலத்திட்டப் பணிகள் சிறப்பு முகாம் தென்திருப்பேரை அருகே உள்ள திருக்கோளூர் கிராமத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் இம்மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.நேற்று திருக்கோளூர் சேர, சோழ, பாண்டியர் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இந்து மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஆதிநாதன் தலைமை தாங்கினார். ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி முன்னிலை வகித்தார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலதிட்டப்பணியாக கோவிலை சுற்றி தூய்மை பணியினை செய்தார்கள். நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், உதவி திட்ட அலுவலர் திருவேங்கடத்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திட்ட அலுவலர் சிவசங்கர ராமன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • “வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் "வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

    பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் விசுவநாதன், ஊர் நாட்டாமை மற்றும் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர் இளையபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கிராமத்தில் சாலை யோரம் முட்புதர்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தூய்மை, கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தொடர்பு அலுவலர் செய்யது முகம்மது ஆரீப் தலைமையில், இயற்கைப் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் சத்ய சாயி அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.

    அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் நிறுவனம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில், மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்டமும் என்னும் தலைப்பில் தலைமையாசிரியர், அன்பின் வலிமை என்னும் தலைப்பில் சிவக்குமார், எழுமின் விழிமின் என்னும் தலைப்பில் கருத்தாளர்.பழனியப்பன், ''நிழல்களும் நிஜங்களும்'' என்ற தலைப்பில் மாரியப்பன், யோகக்கலை என்னும் தலைப்பில் உடற்கல்வி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    ஆசிரியர் விஜயானந்தி கிராம பெண்களுக்குக் கலைப்பயிற்சி வழங்கினார். நிறைவு நாளன்று சங்கமம் பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ், பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • காரைக்காலில் சிறப்பு ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
    • 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெருந்தலை வர் காமராஜர் அரசு பொறி யியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரியின் பேராசிரியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். பேராசிரி யர்கள் பிரவின்குமார், ஞான முருகன். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் மதன்பாபு, ரத்த வங்கியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவன்பஷீர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மனோகரன் மற்றும் மன்சூர் வின்சென்ட், சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 53 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தாமோதரன், உதயகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    ×