என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோளூரில் நாட்டு நலத்திட்டப் பணிகள் - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
    X

    கோவிலில் நாட்டு நலதிட்ட பணிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தொடங்கி வைத்தார்.

    திருக்கோளூரில் நாட்டு நலத்திட்டப் பணிகள் - பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

    • ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலத்திட்டப் பணிகள் சிறப்பு முகாம் திருக்கோளூர் கிராமத்தில் நடைபெறுகிறது
    • பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலதிட்டப்பணியாக கோவிலை சுற்றி தூய்மை பணியினை செய்தார்கள்

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலத்திட்டப் பணிகள் சிறப்பு முகாம் தென்திருப்பேரை அருகே உள்ள திருக்கோளூர் கிராமத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் இம்மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.நேற்று திருக்கோளூர் சேர, சோழ, பாண்டியர் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு இந்து மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஆதிநாதன் தலைமை தாங்கினார். ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி முன்னிலை வகித்தார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலதிட்டப்பணியாக கோவிலை சுற்றி தூய்மை பணியினை செய்தார்கள். நிகழ்ச்சியில் இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், உதவி திட்ட அலுவலர் திருவேங்கடத்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திட்ட அலுவலர் சிவசங்கர ராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×