காரமடையில் ரத்த தான முகாம்

106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
காரமடையில் ரத்த தான முகாம்
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி சார்பில் காரமடையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி காரமடை தலைவர் மகேஷ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார், செயலாளர் சௌமியாசதீஷ் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com