search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லமருது நினைவு நாள்: ரத்ததானம்-அன்னதானம்
    X

    நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாமை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    நல்லமருது நினைவு நாள்: ரத்ததானம்-அன்னதானம்

    • நல்ல மருது நினைவு நாளை முன்னிட்டு 200 பேர் ரத்ததானமும், 5000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    • இதனை முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    அவனியாபுரம்

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியில் முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி ரத்தம் கொடுத்து ரத்த தானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக நல்ல மருதுவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் போஸ் முத்தையா, பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம், கவுன்சிலர் வாசு, சோலையழகுபுரம் கண்ணன், வக்கீல் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கவுதம் போஸ், விஷ்ணுவரதன், ஆதித்யா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.

    Next Story
    ×