என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "superstar"

    • ஷாருக், சல்மான், அமீர்கான் ஆகியோரை குறிப்பிட முடியும்.
    • சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கருத்து.

    திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கும் வழக்கம் இந்தியாவில் உண்டு. தமிழ் மட்டுமின்றி தேசிய அளவில் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் அறியப்படுகிறார். இவர் தவிர மலையாள சூப்பர்ஸ்டார்களாக மம்முட்டி, மோகன்லால், இந்தியில் ஷாருக், சல்மான், அமீர்கான் ஆகியோரை குறிப்பிட முடியும்.

    சமீபத்தில் தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற தலைப்பு மிகப்பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பான சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

     


    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "சூப்பர்ஸ்டார்டம் யாருக்கும், எதுவும் தராது. அது நேர விரயம் மட்டும் தான். சூப்பர்ஸ்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் யாருக்காவது பயன் ஏற்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை."

    "சூப்பர்ஸ்டார் பட்டம் இமேஜை கொடுக்கிறதா என்றும் தெரியவில்லை. என்னை பொருத்தவரை சூப்பர்ஸ்டார் என்பதை விட சூப்பர் ஆக்டர் என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சி. மலையாளத்தின் மூன்று சூப்பர் ஆக்டர்களாக பகத் பாசில், ஆசிப், ரீமா கல்லிங்கல் ஆகியோர் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

    • எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
    • அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.

    அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
    • 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

    தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

    கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான்  நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.

    இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.

     

    ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இணைந்து இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் " நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 'சூப்பர்ஸ்டார் -லோகி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

     ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெரியரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று [ஜூலை 5] தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

    அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுவந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 35 நாட்கள் நடக்க உள்ள படப்பிடிப்பின் ஆரம்பக்கட்ட பணிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    'சூப்பர்ஸ்டார் - லோக்கி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து வெளிவரும் எதிர்மறை செய்திகளில் உண்மையில்லை என தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush
    சென்னை:

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா. கடந்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து காலா படத்துக்கு சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, காலா படம் நஷ்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் செட்டில் செய்ய முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.



    இந்நிலையில், காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து எதிர்மறையாக வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்க்கிய ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush
    ×