'சூப்பர் ஸ்டார் - லோக்கி சம்பவம்'.. தொடங்கியது 'கூலி' படத்தின் சூட்டிங்!

படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'சூப்பர்ஸ்டார் -லோகி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
'சூப்பர் ஸ்டார் - லோக்கி சம்பவம்'.. தொடங்கியது 'கூலி' படத்தின்  சூட்டிங்!
Published on

 ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெரியரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று [ஜூலை 5] தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுவந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 35 நாட்கள் நடக்க உள்ள படப்பிடிப்பின் ஆரம்பக்கட்ட பணிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

'சூப்பர்ஸ்டார் - லோக்கி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com