search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri"

    • நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சோதனையில் அனுமதி இல்லாமல் செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டியன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவத்தன்று நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செம்மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ஜெபஸ்டின், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தப்பி ஓடிய டிரைவர் பானாங்குளத்தை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்த சிதம்பரநாதன் மகள் அனு தர்ஷினி (வயது 17).
    • சமீப காலமாக அனு தர்ஷினி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து இந்திராகாலனி நடுத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவரது மனைவி கலா. இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இதில் 3-வது மகள் அனு தர்ஷினி(வயது 17).அனுதர்ஷினி ஏர்வாடியில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் படுத்திருந்த அனு தர்ஷினி இரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டில் இருந்து சேலையை எடுத்துக் கொண்டு சமைய லறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை கலா எழுந்து பார்த்தபோது அனு தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப்பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பூலம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஊய்க்காட்டான் மனைவி சந்திரலேகா (வயது37). இவர் நாங்குநேரி மேற்கு ஒன்றிய பா.ஜனதா துணை தலைவியாகவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருந்தாளுனராகவும் உள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி முத்து செல்வி (50). இவர் பூலம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.

    தாக்குதல்

    சந்திரலேகாவிற்கும், முத்துசெல்விக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலம் தொடக்கப் பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து முத்து செல்வியும், அவரது கணவர் முத்துராஜும் (55) சேர்ந்து, சந்திரலேகாவை தாக்கிய தாகவும், இதுபோல சந்திர லேகா, முத்துராஜை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருவரும் தனித்தனியாக மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் இது தொடர்பாக சந்திரலேகா, முத்துசெல்வி, அவரது கணவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சந்திர லேகாவை தாக்கிய பஞ்சாயத்து தலைவி முத்து செல்வி மற்றும் அவரது கணவர் முத்துராஜை கைது செய்ய கோரி, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
    • ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களக்காடு டி.கே.எஸ். மண்டபத்தில் மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை யில் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் பால் ராஜ் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கேபிகே.ஜெயக்குமார், ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி நாங்குநேரியில் ரெயில் மறியல் போராட்டமும், வருகிற 20-ந்தேதி ஏர்வாடி யில் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்தார்.

    தொடர்ந்து களக்காடு மெயின் ரோட்டில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம்துண்டு பிரசுரம் வழங்கினர்.பின்னர் காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

    பின்னர் மாவடி சந்திப்பில் காமராஜர் படத் திற்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறக்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, கிருஷ்ண குமார், தொகுதி பொறுப் பாளர் சசிகுமார், பொதுக் குழு உறுப்பினர் ஜார்ஜ், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தனராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், ஆறுமுகம், பொறியாளர் அணி தலைவர் தர்மலிங்கம், வட்டார தலைவர்கள் முருகன், அருள்தாஸ், முத்து கிருஷ்ணன், பாலசுப்பிர மணியன், பிராங் கிளின், ராமச்சந்திரன், நகர தலை வர்கள், களக்காடு ஜெபஸ்டின் ராஜ், சுடலைக்கண்ணு, பொன் ராஜ், அபுபக்கர்,

    ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் மருதூர்-மணிமாறன், சுரேஷ்பாபு, ராஜாபுதூர் காமராஜ், களக்காடு கவுன்சிலர் சின்சான் துரை, களக்காடு பால்சால மோன், முத்துக் குட்டி, செல்வராஜ், மேல பெத்த செல்வராஜ் விக்டர், பிரேம் ராஜ்குமார், வாசு, முன்னாள் நகர தலைவர் சேகர், ஜெயபாண்டி, பொன்ராஜ், மனித உரிமை பிரிவு அந்தோணிராஜ், ராபர்ட் சுஜின், மாவடி செல்லப்பாண்டி ஜான்சன், ராபின் டோனாவூர்.. ஜெயக்குமார், நவநீதன், மனோகரன், ரமேஷ். ஐசக் அற்புதராஜ், கோசல்ராம், வில்லுப்பாட்டு முத்து, மகளிர் காங்கிரஸ் பிரியா, முருகன், அன்ன கவுரி, ஜெபசுதா மற்றும் களக்காடு நகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் களக்காடு இந்திரா காந்தி சிலைகள் மாவடி பஸ் நிறுத்தம் அருகிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மோர் பந்தல் மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு திறந்து வைத்தார்.

    • வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • இளம்பெண்ணின் மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் 32 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வரு கிறார். இதனால் மாதத்திற்கு 2 முறை மட்டும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த இளம்பெண் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது மாமியாரும், குழந்தைகளும் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திடுக்கிட்டு விழித்த அந்த பெண்ணை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.

    எனவே மர்ம நபர் அவர் வாயை பொத்தி, தாக்கினார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். அதற்குள் அவரது சத்தம் கேட்டு, மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்.

    • பொன்னையாவுக்கும், சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் புதுக்குளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 65) விவசாயி . இவருக்கும் அவரது உறவினரான சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொன்னையாவும், அவரது மகன் சரவணபெருமாளும் (40) புதுக்குளம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சுடலையாடும் பெரு மாளுக்கும், பொன்னை யாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.

    இதனை தடுக்க வந்த அவரது மகன் சரவண பெருமாளையும் கத்தியால் குத்தினார். இதனால் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து பொன்னையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சுடலையாடும் பெருமாளை தேடி வருகின்றார்.

    • பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும். இத்திருத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

    பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினமும் பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். 5-ம் திருநாள் அன்று கருடசேவைவயும், 7ம் திருநாள் அன்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்காப்பும் நடைபெற்றது. தொடா்ந்து மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அதன் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    • பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
    • விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு எண்ணை காப்பு நடைபெற்றது.

    களக்காடு:

    நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும்.

    பங்குனி பிரம்மோற்சவ திருவிழா

    இத்தலத்தில் மட்டுமே ஸ்ரீசடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    தங்க சப்பரத்தில் பவனி

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினசரி பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.

    5-ம் திருநாள் அன்று கருடசேவை இடம்பெற்றது. 7-ம் திருநாளான நேற்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணை காப்பும் நடைபெற்றது.

    தொடா்ந்து நாங்குநேரி மற்றும் ஆழ்வார்திருநகரி ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்ப ரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தங்கச் சப்பரத்தில் காட்சி அளித்த பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இரவில் கண்ணாடி சப்பரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். விழாவின் 10-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

    • கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால் இளங்கோ அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது 72). இவர் களக்காடு புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அதிகாலை ஆராதனைக்காக தனது மோட்டார் சைக்கி ளில் புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது நாங்குநேரி-களக்காடு சாலையில் அமைந்துள்ள கிறிஸ்டோபர் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக உடனடியாக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், பெரும்பத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத் திற்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரது மனைவி மேரி மற்றும் மகன் பால் இலக்கிய செல்வன், மகள் ஜென்ஸி பாக்கியரதி ஆகியோர் பால் இளங்கோவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார் என்றும் கூறினார்கள்.

    விபத்து குறித்த தகவல்களை போலீஸ் சரியாக விசாரிக்காமலும், உறவினர்களிடம் சரியான பதில் சொல்லா மலும், உதாசின படுத்தியதாக எம்.எல்.ஏ. விடம் கூறினர்.

    விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியாகவும், குடும்ப தலைவரை இழந்த குடும்பத் திற்கும், உறவினர்களிடமும் விபத்து குறித்த அறிக்கையை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார்கள்.

    உடனே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொலைபேசியில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்ல பாண்டியன், வட்டார தலைவர்கள் வாகை துரை, ராமஜெயம், நிர்வாகிகள் ஜெயசீலன், ராமநாதன், சுந்தர், வின்சென்ட், குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இளங்கோ களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.
    • அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது70). இவர் களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் அதிகாலை ஆராதனைக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வராததால் சபை மக்கள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    பால் இளங்கோ சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    பால் இளங்கோவின் இறப்பு குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தோணிராஜா மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
    • விசாரணையில்,பாலசுந்தர் தங்க செயினை திருடியது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் அந்தோணிராஜா (வயது21). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுரேசுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வள்ளகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 17-ந்தேதி அந்தோணிராஜா மற்றும் உறவினர்கள் புதிய ஆடைகள் வாங்க சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தங்கினர். பெண்ணின் சகோதரர் பாலசுந்தரும் (21) அவர்களுடன் தங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசெயின் மாயமாகியிருந்தது.

    இதுகுறித்து அந்தோணி ராஜா நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாலசுந்தர் தான் தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • இந்த நிலங்களை மீட்பதற்காக நிலங்களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது.

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா விற்குட்பட்ட ஆழ்வார் திருநகரி யில் ஏகாந்தலிங்க சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, திருமலாபுரம் கிராமத்தில் உள்ளது.

    ஆனால் இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் கோவிலுக்குரிய குத்தகை தொகைகளை செலுத்து வதில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற் கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உத்தரவின் பேரில், தனி தாசில்தார் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித், பேஸ்கார் முத்துராஜா, அளவையர்கள் ஜெகன், முத்துசெல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருமலாபுரத்தில் கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் இப்பகுதியில் கோவிலுக்கு சொந்தமாக 1,010 ஏக்கர் நிலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலங் களை மீட்பதற்காக நிலங் களை அளவீடு செய்து கல் பதிக்கப்பட்டு வருகிறது. 900 ஏக்கர் நிலங்கள் கண்டறி யப்பட்டு, கல் நடப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள நிலங்களை கண்டறிய அளவீடு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அளவீடு பணிகள் முடிந்த பின் நிலங்கள் மீட்கப்படும் என்றும் அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    ×