search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri"

    • நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான, வழக்கில் அவரது மேல் முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    நாங்குநேரியில் போராட்டம்

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் பொரு ளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல், அவர் தெரி விக்கும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல், அவர் பாராளு மன்றத்துக்கு வருவதையே தடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இப்படியொரு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், மக்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போய் இருக்கிறது மத்திய அரசு. அதனால்தான், ராகுல்காந்திக்கு எதிரான செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கி எறியும் நாள் நெருங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். மோடியை வீழ்த்திவிட்டு, ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதற்கிடையே நேற்று மாலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோனை கூட்டத்தை நடத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

    சாலை மறியல் போ ராட்டத்தில் தொண்ட ர்களுடன் கைதாகி, திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டதால், ஆலோனை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

    ஆனாலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வேண்டிய விஷய ங்களை, கைதாகி அடைக்க ப்பட்டு இருந்த திருமண மண்டபத்திலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸர் கட்சியினர் எப்படி எதிர்கொள்வது? பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது விரிவாகப் பேசினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வட்டாரத் தலைவரும் தங்கள் பகுதியில் இதுதொடர்பான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனை வரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் இலக்கு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது ஒன்றுதான். அதற்காக ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு புதிய அலுவலகம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வேலையை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து நாங்குநேரி யூனியனில் இயங்கி வரும் நாங்குநேரி வட்டார மகளிர் திட்ட குழு உறுப்பினர்களிடம் அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குறை களையும் கோரிக்கை களையும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார், பொறியாளர்கள் சபரி காந்த், மீனாட்சி, மேலாளர்கள் மலர், முருகப்பெருமாள், மகளிர் திட்ட குழு கலா மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்jது.
    • மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டதாக கிடைத்த தகவலையடுத்து நெல்லை வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

    நாங்குநேரி பெரியகுளத்தின் கரை, மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாழை வயல்களுக்குள் கரடியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கரடியை பிடிக்க 2 கூண்டுகள் வரவழைத்து அதனை 2 இடங்களில் வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    போக்குகாட்டும் கரடி

    4-வது நாளாக இன்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரடிக்கு பிடித்தமான பழ வகைகளை கூண்டில் வைத்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால் கரடி கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

    இந்நிலையில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கரடியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று வனத்துறை அதிகாரிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் பகுதியில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் புதூர் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் கரடியை பிடித்து விடுவோம்." என்றனர்

    • இசக்கியப்பனுக்கும், கொம்பையாவிற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், பலவேசக்கண்ணும் சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி இசக்கியப்பன் (வயது67). இவருக்கும், இவரது தம்பி கொம்பையாவிற்கும் (60) இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இசக்கியப்பன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பையாவிற்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கொம்பையாவும், அவரது மகன் பலவேசக்கண்ணும் (33) சேர்ந்து இசக்கியப்பனை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த இசக்கியப்பனின் மனைவி அம்மா பொன்னுவையும் (60) தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த இசக்கியப்பன், அம்மாபொன்னு ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொம்பையா, அவரது மகன் பலவேசக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

    • அரவிந்த்குமார் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • கார்த்திக் உள்ளிட்டோர் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    களக்காடு:

    விருதுநகர் லெட்சுமிநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது34). இவர் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரும், இவரது நிறுவனத்தில் பணிபுரியும் 10 பெண்களும் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் மாலையில் வேனில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    தகராறு

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் நான்குவழி சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஜீப், வேன் மீது உரசுவது போல் வந்தது. இதைப்பார்த்த அரவிந்த்குமார் வேனை நிறுத்தி, ஜீப்பில் வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த கார்த்திக் (30), தோவா ளையை சேர்ந்த நாகசுமன் (25), ஏர்வாடியை சேர்ந்த சேக்மன்சூர் (19) ஆகியோர் களிடம் தட்டி கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் உள்பட 3 பேரும் சேர்ந்து, அரவிந்த்குமார், வேன் டிரைவரான விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர், துலுக்கர்பட்டியை சேர்ந்த நாகராஜ் (31), சூலக்கரையை சேர்ந்த மாதவி (45) ஆகியோரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    வேன் கண்ணாடி உடைப்பு

    மேலும் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஜீப்பில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    களக்காடு:

    நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.இதனையொட்டி வானமாமலை பெருமாள், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கருடன் சேஷம், அனுமன், சிம்மம், கிளி, யானை, குதிரை அன்னம், தங்க சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவரமங்கை தயாருடன் எழுந்தருளிய வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    இதனையொட்டி காலையில் பெருமாள் தாயாருடன் தேரில் எழுந்தருளினார். நாங்குநேரி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பெருமாள் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

    • இசக்கிமுத்து சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது.

    களக்காடு:

    திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). இவர் பரப்பாடி அருகே உள்ள இலங்குளத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று விநாயகர்புரம் காலனியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பலகையை அறுக்கும் மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.
    • இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முருகன், அதே ஊரில் உள்ள தனது தாயார் நம்பிநாச்சியாரிடம் சென்று சொத்து குறித்து பேசினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரது தம்பி வெள்ளப்பாண்டிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த முருகனின் மனைவி பிரேமா (45) தகராறை விலக்கி விட சென்றார். அப்போது வெள்ளப்பாண்டி பிரேமாவை மண்வெட்டியால் தாக்கினார். இதையடுத்து முருகன் அவரை தடுத்தார். ஆத்திரம் அடைந்த வெள்ளப்பாண்டி முரு கனையும் மண்வெட்டியால் தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயமடைந்த முருகன், அவரது மனைவி பிரேமா ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மோதலில் வெள்ளப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி, இது தொடர்பாக வெள்ளப்பாண்டியை கைது செய்தனர்.

    • கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
    • 4-ம் நாளான இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூரில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி தாயார் உடனுறை ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. கோவில் சன்னதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் ஹோமங்கள் நடத்தப்பட்டது. கஜபூஜை, கோபூஜை தம்பதி பூஜை, கும்பஸ்தாபனம், வாஸ்து சாந்தி, சதூர்வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ம் நாளான இன்று அதிகாலையில் 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின் கோவில் ஜெகநாதர், செண்பகவல்லி தாயார் சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் உள்பட பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 55). இவருக்கு பலவேசம் என்ற மனைவியும், இந்து என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், அவரது மனைவி பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து பலவேசம், கணவரை பிரிந்து, தனது மகன், மகளு டன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங் குறிச்சிக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் சுடலை முத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி சுடலைமுத்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்ப தாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான சுடலைமுத்து என்பதும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் 3 பேர் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை பார்த்ததும் அவர்கள் அவமரியாதையாக திட்டினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் செல்வம் (வயது20), செல்லத்துரை மகன் வான்மகேஷ் (22), நாங்கு நேரியை சேர்ந்த மனோகரன் மகன் உமாபதி (25). இவர்கள் 3 பேரும் நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில் 3 பேரும் அரிவாள்களை தீட்டிய படி இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்களை அவமரியா தையாக திட்டினர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கூலித் தொழிலாளியான நம்பிராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    • இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து கொடுத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை மையத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டும் கருவி பழுதடை ந்துள்ளதால், உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதற்கு இறந்தவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இறந்தவரின் உடலுடன் அரசு மருத்துவமனையின் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு வாங்கி வந்து அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக கொடுத்தனர். இதனை அடுத்து நம்பிராஜன் உடல் அந்த பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

    நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×