search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chariot procession"

    • மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
    • தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.

    நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்திலும், அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 20-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் கருடசேவை நடந்தது. அப்போது ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடங்களின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தார். கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. அதிகாலையில் சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க, கோவிந்தா,கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த தேரோட்டம், நிறைவாக நிலையை வந்தடைந்து.

    அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மலையப்ப சுவாமியின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

    • கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது.
    • இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும். அதன்படி 138-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.15 மணிக்கு முதல் திருப்பலியும், அதனைத்தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியை தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அர்ச்சித்தார். தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    தேர் பவனி

    இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.10-ம் திருவிழாவான இன்று பாளையங்கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. மாலை 7 மணிக்கு முதல் சனி திருப்பலி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை ஜாண் ரோஸ் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர்.

    • விழாவில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது.
    • இன்று மாலை அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி அங்கு கலி வேட்டை நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடக்கும் இவ்விழா வில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடைபெற்று வருகிறது.

    அய்யா கருட வாகனத்தில் பவனி

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம் என பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது. 7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

    8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி அங்கு கலி வேட்டை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மலையில் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்திர வாகன பவனியும் நடக்கிறது .

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினபாண்டி, காசி, ஆதவன், நாதன், கண்ணன், வினோத், பாலகிருஷ்ணன், குனா மற்றும் ஆனந்த், ஸ்ரீரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது.
    • தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி யது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அருட்பணியாளர்கள் கலந்து கொண்டு திருப்பலி மற்றும் மறையுரை ஆற்றினர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது. அப்போது வீதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கி புனித அந்தோணியாரை வழிபட்டனர். தேர் பவனியில் கண்கவர் வான வேடிக்கை நடத்தப்பட்டது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நிறைவு விழா பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் (மே) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 6-ந் தேதி வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில்அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா,தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள்,பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி, வருகிற 6-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரோட்டம்

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்தில் கால்நாட்டு தல் நிகழ்ச்சியும், பின்னர் தேரில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி தேருக்கு புறப்பட்டு வருதலும், செண்டை மேளம் முழங்க 3 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து இரவு சிறப்பு பூஜைகளும், 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், அதனைத் தொடர்ந்து வில்லிசையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா விற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை யில் சவுந்திரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தேரோட்டம்

    இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாத சுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 9 மணிக்கு தேர் வடம் பக்தர்களால் பிடித்து இழுக்கப்பட்டது.

    நான்கு ரத வீதிகளிலும் சுற்றிவந்து நிலையம் வந்தடைந்த தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழங்கள் சூரை விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    களக்காடு:

    நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.இதனையொட்டி வானமாமலை பெருமாள், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கருடன் சேஷம், அனுமன், சிம்மம், கிளி, யானை, குதிரை அன்னம், தங்க சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவரமங்கை தயாருடன் எழுந்தருளிய வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. 10-ம் நாளான நேற்று பெரிய மர தேரோட்டம் நடந்தது.

    இதனையொட்டி காலையில் பெருமாள் தாயாருடன் தேரில் எழுந்தருளினார். நாங்குநேரி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இதில் ஏராளமான பெருமாள் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்தனர்.

    • மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சியும், மே 6-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    • 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தன்னைத்தானே பூஜித்தல் வருகிற மே 2-ந்தேதியும், தொடர்ந்து, மே 6-ந்தேதி தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா நேற்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கிரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மங்கள இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கிலும், மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற உள்ளது.

    அதன்படி, 1-ம் நாள் இந்திர விமானம், 2-ம் நாள் சூர்யப்ரபை, 3-ம் நாள் சேஷ வாகனம், 4-ம் நாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6-ம் நாள் யானை வாகனத்திலும், 7-ம் நாள் கோரதம் மற்றும் புன்னைமர வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா நடைபெற உள்ளது.

    முக்கிய நிகழ்வான 9-ம் நாள் விழா அன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. 10-ம் நாள் சப்தாவர்ண விழாவும், ஏப்ரல்-1-ந்தேதி விடையாற்றி விழாவுடன் நிறைவடைகிறது.

    மேலும், தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 40-வது ஆண்டாக அனைத்து அம்பாளின் அருட்சப்பர பவனி தூத்துக்குடி நகர வீதிகளில் நடைபெற்றது.
    • பவனியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு துள்ளல் மிகு நடனமாடி மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 40-வது ஆண்டாக அனைத்து அம்பாளின் அருட்சப்பர பவனி தூத்துக்குடி நகர வீதிகளில் நடைபெற்றது.

    பவனியில் பாரதமாதா,மேலூர் பத்திரகாளியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன்,அழகேசபுரம் வடக்குவாச்செல்வி அம்மன், மட்டக்கடை சந்தனமாரியம்மன், 1-ம் கேட் ஆதிபரமேஸ்வரி அம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் சுற்றுப்புற கோவில்களில் உள்ள சப்பரங்களும் கலந்துகொண்டு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து மத்திய பாகம் காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக செண்டா மேளம், ராஜமேளம்,உருமி மேளம்,தாரை தப்பட்டைகள் என நான்கு வகையான மேளங்கள் வாணவேடிக்கையுடன், வெகுவிமரி சையாக வலம் வந்து நள்ளிரவு 11.30 மணிக்கு சிவன் கோவில் முன்பாக அனைத்து அம்பாள் சப்பரங்களும் அணிவகுத்து வந்தது. பின்னர் பன்னீர் அபிஷேகம்,பட்டு சாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பவனியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு துள்ளல் மிகு நடனமாடி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்டு 508 மாவிளக்கு ஏந்தி வழிபாடு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரணி அமைப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன், விவேகம் ரமேஷ்,சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா,இந்து முன்னணி சட்ட ஆலோசகர்கள் செல்வராஜ்,நாகராஜ், கருப்பசாமி, இசக்கி லட்சுமி மற்றும் சப்பர பேரணி கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபால், அமைப்பாளர் சிவக்குமார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர்கள் வன்னியர் ராகவேந்திரா சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

    ×