search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி கோவிலில் தேரோட்டம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி கோவிலில் தேரோட்டம்

    • ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்திலும், அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 20-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் கருடசேவை நடந்தது. அப்போது ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடங்களின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தார். கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. அதிகாலையில் சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க, கோவிந்தா,கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த தேரோட்டம், நிறைவாக நிலையை வந்தடைந்து.

    அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மலையப்ப சுவாமியின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

    Next Story
    ×