

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 நாட்கள் நடக்கும் இவ்விழா வில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடைபெற்று வருகிறது.
அய்யா கருட வாகனத்தில் பவனி
இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம் என பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது. 7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.
8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி அங்கு கலி வேட்டை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மலையில் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்திர வாகன பவனியும் நடக்கிறது .
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.
நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினபாண்டி, காசி, ஆதவன், நாதன், கண்ணன், வினோத், பாலகிருஷ்ணன், குனா மற்றும் ஆனந்த், ஸ்ரீரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.