search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower sprinkling"

    • மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
    • தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.

    நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது மேலெநெட்டூர். இங்கு சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ பந்தல் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    விழாவில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல் குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன், சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன், கன்னார்தெரு மாரியம்மன், சுந்தரபுரம் விநாயகர் ஆகிய கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மானாமதுரை பஞ்சபூதேஸ்வரத்தில் உள்ள மகா பஞ்ச முக பிரித்தியங்கிராதேவி கோவிலில் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் கூழ் காய்ச்சி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    • மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணியளவில் மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, காமராஜர் சாலை வழியாக, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வந்து சேரும்.

    அதன் பின்னர் மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும். மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×