search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipality"

    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    • நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது.
    • தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுகிறது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பழையகோட்டை சாலை, கரூர் சாலை, திருப்பூர் சாலை, வாய்க்கால்மேடு, மூர்த்திரெட்டிபாளையம், குதிரைப்பள்ளம்சாலை, அகிலாண்டபுரம், கோட்டைமேடு, கார்த்திகைநகர், பாரதியார் வீதி, காந்திநகர், உடையார்காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் அதனை சரி செய்யும் பணியை மேற்கொள்வது, குடிநீர் மின் மோட்டார் இயங்காமல் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடைபடுவதால் அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் குடிநீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வீதி. வீதியாக பிரித்து விடவேண்டும் எனவும், வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரியாக எடுக்க வருவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுவதால், தூய்மை பணி ஆட்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
    • நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மணிமாறன் நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது, பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சி பொறியாளர் மணிமாறனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.

    • சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறுபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம்மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி , ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும்புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும்பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ்நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம்குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்குவழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.

    மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில்மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்குவழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின்இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளிஉள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது. இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள்,ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியாளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது
    • சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர், ஜூன்.12-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளிலும்,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறை வடைந்து உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களிடம் சுகாதாரம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை பிரித்து வழங்கல் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பொது மக்களிடத்தில் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்யப்பட்டது.

    மேலும், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தவிட்டுப்பா ளையம் பூக்கடை கார்னர் பகுதி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளையும் அனுமதியின்றி அந்தியூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியா ளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில், பொது மக்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    மேலும் சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சிறந்த முறையில் தூய்மைப் பணி செய்த தூய்மை பணியா ளர்கள் அனைவருக்கும் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத் தலைவர் பழனி ச்சாமி ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்கி வித்தனர்.

    இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி,செந்தில் முதுநிலை எழுத்தர் தாமரை அலுவலக பணியாளர் சாந்து முகமது, தங்கராசு, அரிமா தனபாலன், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கவுன்சிலர்கள், தன்னல ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
    • மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கூறியதாவது: -

    பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் குறை தீா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், நிறைகள், பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை இப்பெட்டியில் செலுத்தலாம். இந்த புகாா் மனு பெட்டி ஒவ்வொரு வாரமும் திறக்கப்பட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    கானாடுகாத்தானை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி தமிழ்நாட்டின் முன்மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் வணிக நிறுவனங்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு  மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து வழங்கவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

    கானாடுகாத்தான் பேரூராட்சியை குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா ராமச்சந்திரன் கூறினார்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புக்கரசி, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம், கருப்பையா உள்பட பேருராட்சி அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியின் மேலப்பாளையம் 6-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

    கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் அப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

    4 நாட்களாக பணிகள் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது எடுக்கப்பட்ட படிக்கட்டுகள் இல்லாமல் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நேற்று வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பின்னர் பேரூராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பேரூராட்சி தலைவர் தவமணி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    இளையான்குடி புதிய பஸ் நிலைய விவகாரத்திற்காக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்ற 31-ந் தேதி போராட்டம் நடக்கிறது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்  அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வணிகர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு தொடங்கப்பட்டு அதன் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து  அமைச்சர் கே. என். நேரு பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

    புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்தும், தற்போதைய இளையான்குடி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியும் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்கிழமை)   இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இளையான்குடியில்இந்தகூட்டமைப்பினர்,பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கூட்டமைப்பின் நிர்வாகிகள் துருக்கி ரபீக் ராஜா,ஜபிபுல்லா, கார்த்திமற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்,துணை தலைவர், வணிகர்சங்க நிர்வாகிகள் நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி பேசினர்.

    குமாரபாளையம் 3,9-வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் மேற்ெகாள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். 

    நேற்று 9-வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு சேர்மன் விஜய்கண்ணன் செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி மக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து அவர் அதிகாரிகளை வரவழைத்து, பணிகளை மேற்கொள்ளுமாறு  சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3-வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.
    ×