search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் பேரூராட்சியில்"

    • அந்தியூர் பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
    • 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளில் 2 அ.தி.மு.க.வும், ஒரு கம்யூனிஸ்டு கட்சியும், 15 தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் மாதம்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதம் மாமன்ற கூட்டம் கடந்த 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    பேரூராட்சி வார்டு உறுப்பினர்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பேரூராட்சியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பண்டிகை நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை முன்வைத்து மாமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு மனு வழங்கியதாக தெரிவித்தனர்.

    ஆனால் அறிவித்த தேதியில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதில் 35 தீர்மானங்கள் வாசிக்கும் நிலையில் 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பேரூராட்சி மன்ற தலைவரால் அறிவித்து விட்டு அங்கிருந்து தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், நியமன குழு உறுப்பினர் சென்றனர்.

    இருப்பினும் 10 கவுன்சிலர்கள் மாலை 6 மணி வரை மாமன்ற கூட்டத்தொடர் அறை யிலேயே அமர்ந்திருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    மேலும் இங்கு வேறு ஏதேனும் கைகலப்பு ஏற்படும் என்று பேரூராட்சி அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.

    • செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியாளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது
    • சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர், ஜூன்.12-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளிலும்,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறை வடைந்து உள்ளது.

    இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களிடம் சுகாதாரம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை பிரித்து வழங்கல் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை பொது மக்களிடத்தில் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்யப்பட்டது.

    மேலும், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, தவிட்டுப்பா ளையம் பூக்கடை கார்னர் பகுதி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகளையும் அனுமதியின்றி அந்தியூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் ,தூய்மை பணியா ளர்களைக் கொண்டு,சுத்தம் செய்யப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில், பொது மக்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    மேலும் சிவசக்தி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சிறந்த முறையில் தூய்மைப் பணி செய்த தூய்மை பணியா ளர்கள் அனைவருக்கும் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத் தலைவர் பழனி ச்சாமி ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்கி வித்தனர்.

    இதில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி,செந்தில் முதுநிலை எழுத்தர் தாமரை அலுவலக பணியாளர் சாந்து முகமது, தங்கராசு, அரிமா தனபாலன், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கவுன்சிலர்கள், தன்னல ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×