search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை
    X
    சிவகங்கை

    பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    இளையான்குடி புதிய பஸ் நிலைய விவகாரத்திற்காக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்ற 31-ந் தேதி போராட்டம் நடக்கிறது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்  அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வணிகர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு தொடங்கப்பட்டு அதன் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து  அமைச்சர் கே. என். நேரு பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

    புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்தும், தற்போதைய இளையான்குடி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியும் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்கிழமை)   இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இளையான்குடியில்இந்தகூட்டமைப்பினர்,பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கூட்டமைப்பின் நிர்வாகிகள் துருக்கி ரபீக் ராஜா,ஜபிபுல்லா, கார்த்திமற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்,துணை தலைவர், வணிகர்சங்க நிர்வாகிகள் நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி பேசினர்.

    Next Story
    ×