search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே கொத்தன்குடி ரெங்கநாதன் கீழத்தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன்(வயது 53). இவரது தம்பி ராஜாங்கம். இவரது தந்தை ரெங்கநாதன்.

    ராஜாங்கம் தனது தந்தை ரெங்கநாதனிடம் அடிக்கடி சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்வாராம். இந்நிலையில் இது குறித்த தகராறில் தனது தந்தையை ராஜாங்கம் தாக்கி உள்ளார். இதை கண்டு தடுக்க வந்த அவரது அண்ணன் சந்திரகாசனையும் ராஜாங்கம் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த சந்திரகாசன் ரெங்கநாதன் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இச்சம்பவம் பற்றி சுவாமிமலை போலீசாரிடம் சந்திரகாசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து ராஜாங்கம், கும்பகோணம் மேலத்தெரு ராமலிங்கம் மகன் சிவா, அரியலூர் மாவட்டம் உடையார் தாலுக்கா கம்பிகுளம் பகுதி கோவிந்த சாமி மகன் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் ராஜாங்கத்தை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். #Tamilnews
    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போடும் போது ஊசி உடைந்து கையில் தங்கி, பின்னர் அது நெஞ்சு பகுதிக்கு நகர்ந்துள்ளதால் கர்ப்பிணி பெண் கடும் அவதியடைந்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா (வயது 23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சசிகலா சிகிச்சை பெற்றார். அவருக்கு செவிலியர்கள் ஊசி போட்டனர். அப்போது ஊசி உடைந்து சசிகலா கையில் தங்கி விட்டது. இதனை கவனிக்காமல் வீடு சென்ற சசிகலாவுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உடைந்த ஊசி கையில் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    சசிகலா

    பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது டாக்டர்கள் கையில் இருந்த ஊசியை அகற்றி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து வலி குறையாததால் அது ஆபரேசன் செய்ததால் ஏற்பட்ட வலி என்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

    தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள சசிகலாவுக்கு நெஞ்சு பகுதியில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் நடத்தும் ஒரு டாக்டரிடம் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அப்போது முறிந்து போன ஊசி கையில் இருந்து நகர்ந்து நெஞ்சு பகுதிக்கு வந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் ஊசியை அகற்றவில்லை. கையில் இருந்த ஊசி தற்போது நெஞ்சு பகுதிக்கு வந்துவிட்டது. தஞ்சை மருத்துவமனையில் ஆபரேசன் செய்ததாக கூறி என்னை ஏமாற்றிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கும்பகோணம் அருகே நண்பனுடன் தகராறு செய்த வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த ராஜி மகன் சரவணன் (வயது 21). இவர் பெருமாண்டி பகுதியில் நடந்து சென்றபோது பெருமாண்டியை சேர்ந்த மணிசங்கர் (26) என்பவர் மீது மோதி விட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மணிசங்கரும், சரவணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிசங்கரின் நண்பரான சுந்தர் (24) என்பவர் கத்தியால் சரவணனை குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காயமடைந்த சரவணன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டையைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது24). இவர் திருபுவனத்தில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று திருபுவணம் கீழவீதியைச் சேர்ந்த 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு கடை அருகே விளையாடி கொண்டிருந்தாள் . அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. மணிகண்டனை பார்த்து பயமடைந்த சிறுமி அந்த இடத்தை விட்டு தப்பி சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் திருபுவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    கும்பகோணம் அருகே குத்துவிளக்கு பட்டறை தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி அருளானந்த புரத்தைச் சேர்ந்தவர் அருமைநாதன் இவரது மகன் ஜெயசீலன் (வயது 27 ). இவர் நாச்சியார் கோவிலில் உள்ள ஒரு குத்துவிளக்கு பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பரான மாத்தூரை சேர்ந்த மாதவனும் ( 26) வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் இரண்டு பேருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று மதியம் வீட்டில் ஜெயசீலன் இருந்துள்ளார். பின்னர்மாலை ஜெயசீலனை செல்போனில் தொடர்பு கொண்டு நன்னிலம் மெயின் ரோட்டிற்கு வருமாறு மாதவன் கூறியுள்ளார். இதையடுத்து நன்னிலம் மெயின் ரோட்டுக்கு ஜெயசீலன் சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்ட போதும் செல்போனை எடுத்து அவர் பேசவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜெயசீலனின் உறவினர்கள் நன்னிலம் மெயின் ரோட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சுற்றுமுற்றும் பார்த்துள்ளனர் ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அங்கிருந்து ஜெயசீலனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

    அப்போது செல்போன் சத்தம் சாலையோரம் இருந்த வாய்க்காலில் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த வாய்க்காலில் சென்று பார்த்துள்ளனர். அங்கு கழுத்து , உடலில் வெட்டுக் காயங்களுடன் ஜெயசீலன் இறந்து கிடந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

    ஜெயசீலனை செல்போனில் மாதவன் அழைத்தது ஏன்? எதற்காக அவர் தலைமறைவாக உள்ளார்? ஜெயசீலனை மாதவன் கொலை செய்து விட்டு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    மாதவனை பிடித்து விசாரித்தால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.

    இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் இன்று காலை சிற்ப கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செல்வா சாரங்கபாணி சன்னதி தெருவில் மீனாட்சி, பழனியப்பன் ஆகியோருக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள் தயாரிக்கும் சிற்பக்கூடம் உள்ளது. இந்த ஐம்பொன் சிலைகள் தயாரிக்க ஆபத்து நிறைந்த கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல் காற்றில் பரவினால் சுவாசக் கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    மீனாட்சி, பழனியப்பன் ஆகியோருக்கு சொந்தமான இந்த சிற்பக்கூடம் நெருக்கமான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஐம்பொன் சிலைகள் தயாரிப்புக்காக இவர்கள் விதிகளை மீறி குடியிருப்பு நிறைந்த தெருவில் அதிகளவில் கெமிக்கல் மூட்டைகளை குடோன் அமைத்து அடுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை மீனாட்சி, பழனியப்பன் ஆகியோருக்கு சொந்தமான சிற்பக்கூடத்தில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிற்பக்கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கருதி அச்சமடைந்தனர். அப்போது ஒருவித கெமிக்கல் வாடை கரும்புகையுடன் கலந்து காற்றில் பரவியதால் மூச்சு விட முடியாமல் அவதிக்கு ஆளாகினர் அப்போது தான் விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த குடோனில் ஆபத்து நிறைந்த கெமிக்கல் குடோனில் தீப்பற்றியது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையறிந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக பலரும் தங்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அந்த சிற்பக்கூடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் தயாரிப்புக்கு பயன்படும் எந்திர உபகரணங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததும், கெமிக்கல் மூட்டைகளில் தீப்பரவியதால் ஒருவித நாற்றத்துடன் கரும்புகை பரவியதும் தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தண்ணீரை பீய்ச்சியடித்து போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதில் ரூ.1½ லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் கூறுகையில், கடந்தாண்டும் இதேபோல் இந்த கெமிக்கல் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போதே சிற்பக்கூட உரிமையாளர்களை எச்சரித்து விட்டு சென்றோம். ஆனால் அவர்கள் அலட்சியம் காட்டியதால் மீண்டும் இங்கு தீப்பற்றியுள்ளது. எனவே மேல் நடவடிக்கை எடுக்க இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கெமிக்கல் குடோனில் பற்றிய தீயை விரைந்து அணைத்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கும்பகோணம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப போலீஸ் படையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளது. இந்த நடவடிக்கை போதாது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் மத்திய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. மூலமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே தவிர கைது செய்ய கூடாது.

    மாநில அரசின் தவறான கொள்கை காரணமாக உயர்கல்வி துறையில் 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி விட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார பயணம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சின்னைபாண்டியன், ஜெயபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். #GRamakrishnan
    கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மதுப்பாட்டில்களை போலீசார் பிறமுதல் செய்தனர். இது தொடர்பா 2 வாலிபர்கள் கைதானார்கள்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே வேப்பத்தூரை அடுத்த மணஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒருவீட்டில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் மணஞ்சேரி கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டில் திடீரென அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் 400 மதுப்பாட்டில்களும் , 300 பீர் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 700 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வீட்டில் இருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன்(வயது 28). அகராத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (27). ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி பெரியவன் என்கிற முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். #Tamilnews
    கும்பகோணம் அருகே மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அரசலாற்றங்கரையில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில் இன்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் அரசலாற்றங்கரைக்கு ரோந்து பணிக்கு சென்றனர்.

    அப்போது சிலர் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் 5 மாட்டுவண்டிகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அதன் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ரூ.50 கூடுதல் கட்டணம் கேட்டதால் அதனை ஏற்க மறுத்த பயணி ஒருவர் சென்னை சென்ற பஸ்சை மீண்டும் தான் ஏறிய இடமான கும்பகோணத்திற்கு திருப்பிய சம்பவம் நடந்துள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் டிக்கெட் வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு பதில் ரூ.270 கட்டணம் கேட்டதால் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கண்டக்டர் அணைக்கரை பகுதியில் காடுவெட்டி குருமரணத்தையொட்டி அவரது ஆதரவாளர்கள் பஸ்களின் கண்ணாடியை உடைப்பதால் பஸ் அணைக்கரை வழியாக செல்லாமல் மயிலாடுதுறை வழியாக சுற்றி செல்கிறது.

    அதற்காக ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பயணி இதுபற்றி பஸ்சில் ஏறும் போது ஏன் கூறவில்லை. என்னால் கூடுதல் கட்டணம் கொடுத்து வரமுடியாது. என்னை கும்பகோணம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு செல்லவேண்டும் என்று கறாராக கூறினார். எவ்வளவு கூறியும் அவர் சமாதானம் அடையாததால் அந்த பஸ்சை மீண்டும் கும்பகோணத்துக்கு ஓட்டி வந்து குறிப்பிட்ட பயணியை இறக்கி விட்டு சென்றனர்.

    வழக்கமாக பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் பயணிகளின் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். ஆனால் இந்த பஸ் டிரைவரும், கண்டக்டரும் பயணியின் நியாயமான கோரிக்கையை ஏற்று செயல்பட்டது மற்ற பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் கூடுதல் கட்டணத்தை ஏற்று கொண்ட பயணிகளுடன் அந்த பஸ் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. #tamilnews
    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது என்று கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். #KVeeramani
    கும்பகோணம்:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு திட்டமிட்ட நவீன என்கவுண்டர் ஆகும். என்கவுண்டரில் தனி நபரை ஓட வைத்து சுடுவார்கள். இங்கு கூட்டத்தை கூட்டி அதில் தனி நபரை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். தமிழகத்தில் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் உயிருக்கு ரூ.10 லட்சம் தருகிறோம், ரூ.20 லட்சம் தருகிறோம் என்று விலை கூறுகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் அவர் அரசுக்கு சாதகமான கருத்தையே கூறுவார். எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். தூத்துக்குடியில் 144 உத்தரவை விசித்திர சட்டமாக்கி விட்டனர்.


    தமிழக அரசு மோடி அரசாகவே ஆட்சி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மோடி சொல்வதையெல்லாம் கேட்டு செயல்படுகிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததால் அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை ஏன் செய்யவில்லை.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். குருகுல கல்வியை விட மோசமான கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு உள்ளது.

    பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் ஓராண்டுக்குள் அந்த கல்வி திட்டத்தை செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KVeeramani
    ×