என் மலர்

  நீங்கள் தேடியது "worker murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
  • ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  நாகர்கோவில்:

  பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் எடிசன் (வயது 42), கொத்தனார்.

  இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். இவருக்கும் அவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவருக்கு இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் அவரது அண்ணன் ஜார்ஜ் எடிசனை நெஞ்சில் சரமாரியாக குத்தினார்.

  இதில் ஜார்ஜ் எடிசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அண்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த மார்ட்டின் ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். உடனடியாக ஜார்ஜ் எடிசனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

  அப்போது அங்கு டாக்டரிடம் தனது அண்ணன் ஜார்ஜ் எடிசன் விபத்தில் சிக்கியதாக கூறினார். டாக்டர்கள் ஜார்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆசாரிப்பள்ளம் புற காவல் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் அங்கு வந்து மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

  பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மார்ட்டின் ஜெயராஜை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

  பிடிபட்ட மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்திய போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஜார்ஜ் எடிசனை குத்தியதாக கூறினார். இதிலிருந்து தப்பிக்க விபத்தில் சிக்கியதாக நாடகம் ஆடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

  இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான ஜார்ஜ் எடிசனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.

  சகோதரரை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சீவலப்பேரி தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 15 பேரை கைது செய்தனர்
  • சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்

  நெல்லை:

  பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் தொழிலாளி மாயாண்டி( வயது 38). இவர் கடந்த 10-ந் தேதி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர்.

  பேச்சுவார்த்தை

  இதற்கிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாயாண்டியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தனர். அவர்களுடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அப்போது, உயிரிழந்த மாயாண்டி குடும்பத்தாருக்கு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

  அரசு வேலை

  மேலும் மாயாண்டி குடும்பத்தில் ஒருவருக்கும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கும் அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்.

  2 பேர் குடும்பத்தின ருக்கும் பாளை கிருபா நகரில் 3 சென்ட் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் மாயாண்டியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

  உடல் ஒப்படைப்பு

  இந்நிலையில் மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க இன்று அவரது உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் மாயாண்டியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

  அவர்கள் மாயாண்டியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான சீவலப்பேரியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  பலத்த பாதுகாப்பு

  இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரவணன் தலைமையில் சீவலப்பேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் சீவலப்பேரியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிப்ட் கொடுக்க வேண்டாமென ஆந்திர போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
  • முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்‌.

  திருப்பதி:

  தெலுங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல் (வயது 45). தொழிலாளி. இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்.

  ஜமீல் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்று கொண்டிருந்தார்.

  அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் ஒருவர் லிப்ட் கேட்டார். அதை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு மீண்டும் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னாடி இருந்த நபர் திடீரென ஜமீலின் முதுகில் ஊசி போட்டார்.

  சுருக்கென தனது முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றார்.

  அப்போது லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை நிறுத்துவதற்குள் இறங்கி தப்பி ஓடிவிட்டார். லிப்ட் கேட்டு வந்தவர் தப்பி ஓடுவதற்கு முன்னதாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசி விட்டு ஓடினார்

  அதைப் பார்த்துவிட்ட ஜமீல் தனக்கு ஊசி போட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செல்போன் மூலம் தனது மனைவிக்கு தெரியப்படுத்தினார்.

  அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதற்குள் ஜமீலுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் இறந்தார்.

  ஜக்கைய்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஊசி போட்ட சிரிஞ்சை கைப்பற்றி கொலையாளியை தீவிரமாக வருகின்றனர்.

  முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்‌.

  முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிப்ட் கொடுக்க வேண்டாமென ஆந்திர போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
  • போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கவுந்தப்பாடி:

  ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

  கால்வாய் அமைக்க கம்பி கட்டும் வேலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  இவர்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்ப நகர் என்ற பகுதியில் தகர ஷெட் அமைத்து தங்கி உள்ளனர்.

  தினமும் இங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று வந்தனர். தற்போது இவர்கள் கோபிசெட்டிபாளையம்- அத்தாணி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  நேற்று இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு திரும்பி வந்தனர். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் மது குடித்துவிட்டு சீட்டு விளையாடினர்.

  அப்போது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியை சேர்ந்த சுஷின் (40), மருங்கூர் தாலுகா ராஜாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோருக்கும் இடையே நள்ளிரவு 2 மணி அளவில் சீட்டு விளையாடுவதில் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் சுஷினை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இது குறித்து கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் (கவுந்தப்பாடி), சண்முகம் (கோபி செட்டிபாளையம்), துரை பாண்டி (கடத்தூர்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  மேலும் கொலை நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

  இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட சுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த கொலை குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
  • சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் மது குடிக்க சென்றார்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 38), கட்டிட கான்கிரீட் கலவை எந்திரத்தை இயக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

  மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக அலெக்ஸ் தனியாக வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் உச்சிப்புளி அலைகாத்த வலசை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தென்னந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அலெக்ஸ் பிணமாக கிடந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அலெக்ஸ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மனைவியை பிரிந்து வாழ்ந்த அலெக்ஸ் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அலெக்ஸ் தன்னுடன் பணிபுரியும் நண்பர் உச்சிப்புளி பசும்பொன் நகரை சேர்ந்த முருகேசன் என்ற பிரபுவுடன் (23) மது குடிக்க சென்றார்.

  தோப்பில் மது குடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் போதையில் பிரபுவின் மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபு மது பாட்டிலை உடைத்து அலெக்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணைகள் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணக்குடி பகுதியில் ஒரே அறையில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
  • கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

  திருவட்டார்:

  திருவட்டார் அருகே சித்திரங்கோடு பகுதியில் அலங்கார தரையோடுகள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

  இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சோம்போ (வயது 28), அனில் பர்மன் (22) மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் அங்கேயே உள்ள அறை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

  நேற்று இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சோம்போ, அனில்பர்மன் இருவரும் குடிபோதையில் இருந்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

  சோம்போ, அனில்பர் மனின் உறவினர்களை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. பெண்களை இழிவாக பேசியதால் ஆத்திரமடைந்த அனில்பர்மன் அங்கிருந்த பாட்டிலால் சோம்போவை தாக்கினார். பின்னர் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பியாலும் அடித்தார். இதில் சோம்போ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சோம்போ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனில் பர்மனை கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்ட அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தென் தாமரைகுளம் அருகே மணக்குடி பகுதியில் இதே போல் ஒரே அறையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளி அங்கிருந்து தலைமறைவானார். இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

  இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் என்பது கண்டறியப்பட்டது.
  • பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

  மதுரை:

  மதுரை ஜெய்நகரில் தனியார் பள்ளி அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

  அப்போது அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ இரும்பு ஆயுதத்தால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் (வயது 60) என்பது கண்டறியப்பட்டது. பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

  அவரை கொலை செய்தது யார்? என்பது கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று நள்ளிரவு அய்யனார் சம்பவ இடத்தில் நடந்து வருவது, அவரிடம் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் பீடி கேட்டு தகராறு செய்வது, அப்போது அந்த வாலிபர் அய்யனாரை தலையில் சுத்தியலால் சரமாரி தாக்குவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

  ஆனால் அய்யனாரை அடித்து கொன்ற வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யனாரை கொன்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
  • பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

  கோவில்பட்டி:

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). கட்டிட தொழிலாளி.

  இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். ஒரு குழந்தை மட்டும் உள்ளது. குழந்தை, பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

  பாலமுருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

  பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (39) என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை முத்துராஜிடம், பாலமுருகன் தான் கடனாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தற்பொழுது தன்னிடம் பணம் இல்லை, சில தினங்களில் கொடுத்து விடுவதாக முத்துராஜ் கூறியுள்ளார்.

  இருப்பினும் பாலமுருகன், பணத்தினை உடனே தர வேண்டும் என்று கூறி அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து முத்துராஜ், பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் சென்று பணத்தினை விரைவில் தருவதாகவும், பாலமுருகன் அவதூறாக பேசுவதாகவும் கூறியுள்ளார்.

  இதனைத்தொடர்ந்து ரேவதி, பாலமுருகனை சத்தம் போட்டுள்ளார். மது போதையில் இருந்த பாலமுருகன் ரேவதிவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ரேவதி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

  இந்நிலையில் நேற்றிரவு அதிக மது போதையில் இருந்த பாலமுருகன், எப்படி நீ பணம் கேட்டதை சித்தியிடம் கூறினாய் என்று கூறி முத்துராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தி விட்டு ஓடிவிட்டார்.

  இதில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
  • நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இவர்களது மகன் கார்த்திக் (38). இவர் கோழி வண்டி லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார்.

  கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  அப்போது வீட்டுக்கு வரும் மின் ஒயரை ராஜி அறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மீண்டும் இரவு 11 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ரிப்பர் கட்டையால் ராஜிவை தாக்கியுள்ளார்.

  இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  கொலை செய்யப்பட்ட ராஜிவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தொழிலாளியை விரட்டிச் சென்று படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகநாதன் (வயது 32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

  ராமநாதபுரம் பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று பிற்பகல் 11 மணியளவில் நாகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்கள் நாகநாதனை கொலை செய்ய முற்பட்டனர். இதைப்பார்த்த நாகநாதன் அவர்களிடம் தப்பிப்பதற்காக ஓடினார்.

  ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  அவர் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக அங்கிருந்து சென்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகநாதன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தோட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

  பேரையூர்:

  திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வெள்ளிராஜன் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தைச் சேர்ந்த குண்டாறு சக்திவேல் (35) என்பவர் தோட்டத்துக்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த ஆடுகளை திருட முயன்றார். இதை பார்த்த வெள்ளிராஜன் அவரை தடுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த குண்டாறு சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளிராஜனை சரமாரியாக குத்தியும், தாக்கியும் அங்கிருந்து தப்பினார்.

  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வெள்ளிராஜனை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவையில் பதுங்கி இருந்த கொலையாளி குண்டாறு சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print