search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது
    X

    கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது

    கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 மதுப்பாட்டில்களை போலீசார் பிறமுதல் செய்தனர். இது தொடர்பா 2 வாலிபர்கள் கைதானார்கள்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே வேப்பத்தூரை அடுத்த மணஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒருவீட்டில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் மணஞ்சேரி கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டில் திடீரென அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வீட்டில் 400 மதுப்பாட்டில்களும் , 300 பீர் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 700 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வீட்டில் இருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன்(வயது 28). அகராத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (27). ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி பெரியவன் என்கிற முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×