என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்- கல்லூரி மாணவி மாயம்
    X

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்- கல்லூரி மாணவி மாயம்

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.

    இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×