search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 கூடுதல் கட்டணம் கேட்டதால் சென்னை சென்ற பஸ்சை கும்பகோணத்திற்கு திருப்பிய பயணி
    X

    ரூ.50 கூடுதல் கட்டணம் கேட்டதால் சென்னை சென்ற பஸ்சை கும்பகோணத்திற்கு திருப்பிய பயணி

    ரூ.50 கூடுதல் கட்டணம் கேட்டதால் அதனை ஏற்க மறுத்த பயணி ஒருவர் சென்னை சென்ற பஸ்சை மீண்டும் தான் ஏறிய இடமான கும்பகோணத்திற்கு திருப்பிய சம்பவம் நடந்துள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் டிக்கெட் வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு பதில் ரூ.270 கட்டணம் கேட்டதால் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கண்டக்டர் அணைக்கரை பகுதியில் காடுவெட்டி குருமரணத்தையொட்டி அவரது ஆதரவாளர்கள் பஸ்களின் கண்ணாடியை உடைப்பதால் பஸ் அணைக்கரை வழியாக செல்லாமல் மயிலாடுதுறை வழியாக சுற்றி செல்கிறது.

    அதற்காக ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பயணி இதுபற்றி பஸ்சில் ஏறும் போது ஏன் கூறவில்லை. என்னால் கூடுதல் கட்டணம் கொடுத்து வரமுடியாது. என்னை கும்பகோணம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு செல்லவேண்டும் என்று கறாராக கூறினார். எவ்வளவு கூறியும் அவர் சமாதானம் அடையாததால் அந்த பஸ்சை மீண்டும் கும்பகோணத்துக்கு ஓட்டி வந்து குறிப்பிட்ட பயணியை இறக்கி விட்டு சென்றனர்.

    வழக்கமாக பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் பயணிகளின் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். ஆனால் இந்த பஸ் டிரைவரும், கண்டக்டரும் பயணியின் நியாயமான கோரிக்கையை ஏற்று செயல்பட்டது மற்ற பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் கூடுதல் கட்டணத்தை ஏற்று கொண்ட பயணிகளுடன் அந்த பஸ் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. #tamilnews
    Next Story
    ×