search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats"

    • திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.

    பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது.
    • அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, கோம்பை, அப்பாயிபாளையம், வரகூர், பண்ணைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

    துறையூர், திருச்சி, கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கி ன்றனர். நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித் திருந்தது. இதனால் ஒரே நாளில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
    • இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

     உடுமலை :

    உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.

    இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.

    எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நாகையாபுரம் அருகே ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
    • திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் சபரிமலை கண்ணன் என்பவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவரது ஆட்டு கொட்டகையில் இருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் 6 ஆடுகளும் திருடு போனது. இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏ.தொட்டியபட்டி கிராமத்தில் ஆடுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

    • ஆடுகளை முத்தண்ணம் பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு சென்றுள்ளனர்.
    • தெரு நாய்கள் தொல்லையால் வேலை முடிந்து இரவு நேரங்களில் அவ்வழியாக வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கேயம் ரோடு, நல்லிக்கவுண்டர் நகர், ஒரு வங்கி அருகே வசித்து வருபவர் மணி மற்றும் ஈஸ்வரன். இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு, பகலில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் புகுந்த தெரு நாய்கள் 5 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. அதில் 3 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

    2 ஆடுகளை முத்தண்ணம் பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்கதையாக உள்ளது. தெரு நாய்கள் தொல்லையால் வேலை முடிந்து இரவு நேரங்களில் அவ்வழியாக வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி,ஆடு,மாடு சந்தை கூடுவது வழக்கம்.
    • இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி,ஆடு,மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை யை யொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூ:டியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.   மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் வேலூர் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்க ப்பட்டன. வாரச்சந்தையில் சுமார்ரூ 5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயி களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

    இதில் சின்னசேலம் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை விற்பனைக்காக காலையிலே சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பண்டிகை இல்லாத நாட்களில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற சின்னசேலம் வாரசந்தையில் பல ஊர்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவந்த ஆடுகள் 75 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதில் வியாபாரிகள் ஆடுகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் 70 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சடையாண்டி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் ஒரு முறை வைகாசி பவுர்ணமி அன்று தங்களாச்சேரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழா நடந்தது. தங்களாச்சேரி, அம்மாபட்டி, பன்னிக்குண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நேர்த்திக்கடனாக ஆடுகளை வளர்த்து தானமாக வழங்கினர். அரிசி உள்ளிட்ட பலசரக்கு சாமான்களையும் வழங்கினர். நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட 70 ஆடுகளை வெட்டி சடையாண்டி சுவாமிக்கு படையலிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து காலையில் இருந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லையை அடுத்த வேப்பங்குளத்தில் 9 ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்தவர் பெருமாள். அதே பகுதியை சேர்ந்தவர் சப்பாணி.

    இவர்களது 9 ஆடுகள் மற்றும் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு சொந்தமான 6 மாடுகள் ஆகியவை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள கோபால்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

    இந்நிலையில் அவை அனைத்தும் திடீரென வாயில் நுரை தள்ளி அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. 6 மாடுகள் மயக்கம் அடைந்தன.

    அதனை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவை விஷம் கலந்த செடிகளை தின்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலிடம் விசாரித்தனர். அதில், வயலில் உளுந்து சாகுபடி செய்திருந்ததை கால்நடைகள் அவ்வப்போது புகுந்து நாசமாக்கியதால் அரிசியுடன் குருனை மருந்தை கலக்கி செடிகளில் தெளித்தது தெரியவந்தது.  

    இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
    சாத்தான்குளம் ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கால்நடை  மருத்துவமனை  அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவராக்கும் நோக்கில்  ஏழ்மை நிலையிலுள்ள விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100  பேருக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. 

    சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர்  ஜெயபதி தலைமை  தாங்கினார்.  தாசில்தார்  தங்கையா, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மருத்துவர் செல்வக்குமார் வரவேற்றார். 

    சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோசப், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திட்டத்தை விளக்கி பேசினர். இதில் ஊர்வசி  அமிர்தராஜ்  எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம்  100 பேருக்கு 500 வெள்ளாடுகள் வழங்கி பேசினார்.
    புளியங்குடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏழைகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
    புளியங்குடி:

    புளியங்குடி கால்நடை மருத்துவமனையில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் ஆதரவற்ற பெண்கள் ஒருவருக்கு 5 ஆடுகள் வீதம் 100 பேருக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்சிக்கு சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் விஜயாசவுந்திர பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி திட்ட விளக்க உரையாற்றினார். 

    சிந்தாமணி கால்நடை மருத்துவர் கருப்பையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டு 100 பெண் பயனாளி களுக்கு ஆடுகளை வழங்கி னார். 

    இதில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரக்மான், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் மற்றும் எராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல், சாலைகளில் ஆடுகளை அவிழ்த்துவிடக் கூடாது என நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    எனவே சொந்தமாக ஆடுகளை வளர்ப்போர் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். அதையும் மீறி சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடுகளை அவிழ்த்து விடும் ஆட்டின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி காவல்துறை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×