என் மலர்

  நீங்கள் தேடியது "Puliyangudi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
  • பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  புளியங்குடி:

  புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.

  மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் ராஜ்குமார்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், வெண்ணிக்காலாடி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

  புளியங்குடி:

  புளியங்குடி நகர இந்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.

  கூட்டத்தில் சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கைக்கு குழு ஒன்றை அமைக்கவும், சங்கத்திற்கான நிரந்தர வங்கி கணக்கு தொடங்கவும், கடந்த ஆண்டு புளியங்குடியில் மரக்கடை தீ எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இழப்பீடு வழங்க நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களை சந்தித்து நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடவும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.
  • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

  புளியங்குடி:

  சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.

  புளியங்குடி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள் செஸ் தம்பி லோகோவை 200 கிலோ கோலப் பொடியில் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்தினர்.

  மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஓவியம் வரைந்த மாணவிகளையும், செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும் பள்ளி சேர்மன் சுபாஷ் கண்ணா, நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா, பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் ஆகியோர் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  புளியங்குடி:

  தென்காசி மாவட்டம் புளியங்குடி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய கணேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய டி.எஸ்.பி.யாக குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த அசோக் புளியங்குடி உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். இவரது மனைவி தனுஷியா தென்காசியில் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக பணி புரிகிறார்.

  புதிதாக பொறுப்பேற்று கொண்ட டி.எஸ்.பி.க்கு புளியங்குடி சப்-டிவிசன் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ கணேசன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
  • புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புளியங்குடி:

  புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 67). கூலி தொழிலாளி. இவர் நேற்று புளியங்குடி பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

  இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×