பாம்பு கோவில் சந்தை அரசு பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதுதென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
Published on

புளியங்குடி:

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புளியங்குடி அருகே உள்ள பாம்பு கோவில் சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை கவுதமன், கோவிந்தராஜ் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com