search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்
    X

    பவானி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு வருசாபி ஷேகத்தை முன்னிட்டு 504 பால்குடம் தமிழ்நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் எடுக்கப்பட்டு விநாயகர் கோவிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தது.

    அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமானம் கோபுர கலசங்கள் மீது இலஞ்சி ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் 21 வகையான நறுமணப் பொருட்கள் உள்பட பாலாபி ஷேகமும், தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்று காளி, நாகக்காளி, ரத்தக்காளி, சூலக்காளி, பதினெட்டாம்படி கருப்ப சாமி, செங்காளி யம்மன், மகாகாளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    அம்மனுக்கும், புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபா ராதனை காண்பிக்கப்ட்டது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையில் காலை 9 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திரவியாகுதி, பூர்ணா குதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரனம், ராபர்பனம், ரக்சா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு இரவு 8 மணிக்கு எந்திர ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×