புளியங்குடியில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

புளியங்குடி:

புளியங்குடியில் நகர பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புளியங்குடியில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த அறநிலையத் துறையை வலியுறுத்தியும், 25-வது வார்டில் உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டியும், 31-வது வார்டு தெருவில் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை ஒரமாக வைக்க வேண்டும் எனவும் பலதடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் ஆர்ப்பாட்டம் நடத்தவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகர தலைவர் சண்முகசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், நகர பொது செயலாளர் மாரியப்பன் மாரீஸ், நகர பொருளாளர் அருணாசலம், நகர் மன்ற உறுப்பினர் திருமலை செல்வி, நகர துணை தலைவர் நீராதிலிங்கம் திருமலைகுமார், அஸ்வதி மாரியப்பன்,மாவட்ட மகளிரணி தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன், நகர மகளிரணி தலைவர் பொன்சரோஜினி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com