புளியங்குடியில் செல்வமகள் திட்ட சிறப்பு முகாம்

புளியங்குடி தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.40 பெண் குழந்தைகளுக்கு நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது சொந்த செலவில் முதல் தவணையை செலுத்தினர்.
முகாம் நடந்த போது எடுத்த படம்.
முகாம் நடந்த போது எடுத்த படம்.
Published on

புளியங்குடி:

புளியங்குடி தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புளியங்குடி அஞ்சலகத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகளுக்கான கணக்கு தொடங்கும் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, சதன் திருமலை குமார், புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் அந்தோணிசாமி, காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்பம்சத்தை புதிதாக கணக்கு தொடங்கிய பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார். புதிதாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த 40 பெண் குழந்தைகளுக்கு நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது சொந்த செலவில் முதல் தவணையை செலுத்தினர். ஏற்பாட்டினை புளியங்குடி துணை அஞ்சலக அதிகாரி ஸ்டெல்லாமேரி மற்றும் அஞ்சலக அதிகாரிகள் செய்திருந்தனர். இதில் அஞ்சல் துறை அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com