search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகளை வேட்டையாடுவது வளர்ப்பு நாய்கள் - வனத்துறையினர் ஆய்வில் தகவல்
    X

    கோப்புபடம்.

    ஆடுகளை வேட்டையாடுவது வளர்ப்பு நாய்கள் - வனத்துறையினர் ஆய்வில் தகவல்

    • கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
    • இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.

    இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.

    எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×