என் மலர்
நீங்கள் தேடியது "100 women"
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவராக்கும் நோக்கில் ஏழ்மை நிலையிலுள்ள விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். தாசில்தார் தங்கையா, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மருத்துவர் செல்வக்குமார் வரவேற்றார்.
சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோசப், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திட்டத்தை விளக்கி பேசினர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பேருக்கு 500 வெள்ளாடுகள் வழங்கி பேசினார்.






