search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPI"

    கிராம அலுவலர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் பத்து தினங்களுக்கு மேலாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலும் வேலைநிறுத்தம் மேற்கொண்டு இருப்பதால், புயல் பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்கல் போன்ற பணிகளும், நடவடிக்கைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அவர்கள் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Mutharasan
    பிளாஸ்டிக் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNGovt #Mutharasan #PlasticBan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்குக்கு தடை விதித்துள்ளது. அரசின் தடை என்பது ஒட்டுமொத்த பிளாஸ்டிக்குக்கும் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

    சிறு, குறு தொழில் முனைவோர், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தயாரிக்கின்றனர். இத்தகைய பிளாஸ்டிக்குக்குத் தான் தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

    ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை ஆகும். அதனை தமிழக அரசு தடை செய்யவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

    சிறு, குறு தொழில் முனைவோர், வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்றும், தங்களின் நகை மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தும், அதனை விற்பனை செய்தும், இத்தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.


    திடீர் தடை காரணமாக அவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிறது. முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பயனளிக்காத நிலையில் நாளை (18-ந்தேதி) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர்.

    தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாது, பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் அதனை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் நலன்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை குறித்து மறுபரிசீலனை செய்திட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovt #Mutharasan #PlasticBan
    சென்னை ஐஐடி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ChennaiIIT #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளன. உணவை உண்பதற்கு தனித்தனியான தட்டுகளும், பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. கை கழுவும் இடங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதை அறிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதீய பாகுபாடாகும். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மற்றும் பட்டியல் பழங்குடியின சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரான இச்சாதீய ரீதியான பாகுபாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதீய பாகுபாட்டை கடைபிடிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #ChennaiIIT #Mutharasan
    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் கூறினார். #SterlitePlant #Mutharasan
    மதுரை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆலையை மீண்டும் திறந்தால் தமிழகம் கொந்தளிக்கும்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

    அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தத்தளித்து வருகிறார்கள். கஜா புயல் நிவாரணத்துக்காக போராடும் மக்கள் மீது தேவையற்ற அடக்கு முறையை அரசு கையாண்டு வருகிறது.


    பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். ஆனால் இது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பயன்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #Mutharasan
    கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியது. GajaCyclone #GajaCycloneRelief #CPI
    சென்னை:
        
    தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #CPI
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு அவசரம் காட்டியிருக்க வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். #Sabarimala #CPI
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரத்தில் பினராயி விஜயன் மீது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முதல்வர் அவசரம் காட்டி இருக்க வேண்டாம். அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இது தொடர்பாக ஒரு சமாதான முடிவை எடுத்து இருக்கலாம்.

    இதன் மூலம் இந்த பிரச்சனையை அமைதியாக, பொறுமையாக கையாண்டு இருக்கலாம் என்பது எங்கள் கருத்து. ஆனாலும் ஆளும் கட்சிக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.  #Sabarimala #CPI
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் சபரிமலைக்கு செல்வதா? என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan #BalaKrishnan
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது போலீஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்பில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. தமிழ்நாடு முழுவதும் இருந்து அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    அரசு நிர்வாகம் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் அங்கு முகாமிட்டு தேவையான உதவிகளை செய்கின்றனர். நான் கூட 3 நாட்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தோம். அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.

    ஆனால் மத்திய மந்திரியாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் புயல் பாதித்த பகுதிக்கு செல்லவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து புயல் நிவாரண உதவி கேட்ட போது பொன்.ராதாகிருஷ்ணனும் டெல்லி சென்றிருக்க வேண்டும்.

    அதற்கு மாறாக சபரிமலைக்கு சென்று போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்கிறார். இது என்ன நியாயம்? பொன்.ராதா கிருஷ்ணனை போலீஸ் அதிகாரி தடுக்கவில்லை. அவருடன் பின் தொடர்ந்து 50 வாகனங்களில் வந்தவர்களை தான் ஊர்வலமாக விட முடியாது என்றார்.



    குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீஸ் அதிகாரி எடுத்து கூறுகிறார். ஆனால் அவருடன் வந்த ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்வதை பொன்.ராதாகிருஷ்ணன் வேடிக்கை பார்க்கிறார். இது நியாயமா?

    ஒன்றுமில்லாத இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையடைப்பு நடத்த வைக்கிறார். இது தேவையா? புயல் பாதிப்பை திசை திருப்பும் செயலாகத்தான் இதை கருத வேண்டி உள்ளது.

    அவர் சபரிமலைக்கு செல்வதை நான் குறை கூறவில்லை. அது அவரது தனிப்பட்ட விசயம். ஆனால் புயல் பாதிப்பில் 12 மாவட்டங்கள் சீர்குலைந்து கிடக்கும் நிலையில் அந்த மாவட்ட மக்களுக்கு உதவாமல் சபரிமலை சென்று சர்ச்சையில் ஈடுபடுவது நியாயமா? என்றுதான் கேட்கிறோம்.

    மக்கள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் சபரிமலை பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமரை சந்தித்து தமிழக நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி இருக்க வேண்டும். அதை பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை.

    இந்த விசயத்தில் பொன். ராதாகிருஷ்ணன் நடந்து கொண்ட செயல் முழுக்க முழுக்க சரியில்லை.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BalaKrishnan #Sabarimala
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Mutharasan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வி.தொ.ச மாநில செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கோட்டூர் ஒன்றியசெயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #Mutharasan
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 7 பேரை அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக முத்தரசன் அறிவித்துள்ளார். #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்தும், கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தி வந்த வடலூர் கலியமூர்த்தி, கோடங்குடி கிளையைச் சேர்ந்த சுப்பிரமணியன், அம்பிகா, நிதிநத்தம் உலக நாதன், வதிட்டபுரம் முருகையன், தொளார் நாராயண சாமி, ராமச்சந்திரன் (காட்டு மன்னார்கோவில்) ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட நபர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தவிதமான அரசியல், அமைப்புநிலை உறவுமில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #CPI #Mutharasan
    கஜா புயல் நிவாரண பணிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து ஈடுபடுங்கள் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘கஜா’ புயல் நேற்று நள்ளிரவு நேரத்தில் வேதாரண்யம் அருகில் கரை கடந்துள்ளது. கனமழையுடன் பலத்த புயல் காற்று வீசியதால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து வீசப்பட்டிருக்கின்றன. குடிசை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளும், மின் கம்பங்களும் அடியோடு சாய்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கால் நடைகளும் சேதப்பட்டுள்ளன.

    குடியிருப்புகளில் வசிக்க முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்யவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இந்த மோசமான இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாத்து, மறுவாழ்வை உறுதிப்படுத்தும் நிவாரண நடவடிக்கைக்களை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், அரசு அலுவலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார். #CPI #Mutharasan #GajaCyclone
    மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக ஓரணியில் திரண்டு வருவதாக முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    சுதந்திரமாக செயல்படக் கூடிய சி.பி.ஐ., வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது

    இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜ. க.வை எதிர்ப்பதற்கும், 2019 தேர்தலுக்காகவும் ஒன்று கூடி வருகிறோம். 2019 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.

    பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையே அதற்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

    இயற்கை சீற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். ஆனால் ‘கஜா’ புயலுக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினாலும் அவர்களுக்கு முறையாக நடவடிக்கை எடுப்பதற்கு நேரம், கால அவகாசம் இல்லை.


    ரஜினிகாந்த் நல்ல நடிகர், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது. மாநில அரசு 7 பேரின் விடுதலைக்கு அக்கறை காட்டவில்லை.

    இலங்கையில் தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை நடந்து வருகிறது. தமிழர்களுக்கு அங்கு ஒருபோதும் பாதுகாப்பு கிடையாது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு மவுனத்தை கலைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #BJP
    ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார். #Rajinikanth #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினி ஒரு சிறந்த நடிகர், அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும். தவறான கருத்துகளை கூறிவிட்டு ஊடகங்கள் மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.

    பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பயிற்சி உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்


    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rajinikanth #Mutharasan
    ×