search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness"

    • சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் திடக்கழிவு மேலாண்மை, நகரின் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிா்த்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு பொது சுகாதாரம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தல் குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    இதையடுத்து, சீபுரம் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி, செயல் அலுவலா் ஹரிதாஸ் உள்பட கலந்து கொண்டனா்.

    • ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
    • 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும். வருகிற 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தியும் விபரம் இணைக்கப்படும்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு, வீடாக சென்று விபரம் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பவாக்காளரின் ஆதார் விவரங்களை

    இணைக்கும் திட்டம்

    விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் வேதியியல் துறையின் சார்பாக மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.

    ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆனந்தவிஜயகுமார் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு)முனைவர் எபநேசர், மகபேறுசிறப்பு மருத்துவர் பவ்யா மற்றும் கலைகல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி வரவேற்றார்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜூபி, பார்மகாலேஜ் துறை தலைவர் முனைவர் பிரவின், ஈசா யோக மையத்தின் உதவியாளர் சிவக்குமார், முனைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர் அருண், விரிவுரையாளர் பிரியதர்ஷனி உள்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருகிறது.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் .

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி வீரபாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விளக்க உரைகளை வழங்கினர். போதைப்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்து வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதும் விற்பதும் சட்டப்படி குற்றம் .

    போதைப்பொருள்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களிடையே இன்ஸ்பெக்டர் ஆனந்த் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    • குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
    • என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு சார்பாக, தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது எவ்வாறு என்று செய்முறை விளக்கமும் மாணவ- மாணவிகளிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்பத்தப்பட்டது.

    என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணர்வும் மற்றும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

    • பூமியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார ஆய்வாளர் விளக்கம்
    • நெகிழியை எவ்வாறு ஒழிப்பது, மக்கும் குப்பை - மக்காத குப்பை என்பது என்ன குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பது பற்றி நேரடியாக விளக்கம்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில்அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மறுசுழற்சி பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கைகாட்டிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    நாம் வசிக்கும் பூமியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் இப்பூமிக்கு பெரும் கேடு விளைவிக்கும் நெகிழியை எவ்வாறு ஒழிப்பது, மக்கும் குப்பை - மக்காத குப்பை என்பது என்ன குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பது பற்றி நேரடியாக பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி விளக்கம் அளித்தார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் செந்தாமரை கண்ணன், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் "என் குப்பை என் பொறுப்பு" சார்பில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல் நிகழ்ச்சியானது பொது சுகாதாரப்பிரிவு-II ஐஸ்வர்யா நகர்(ஆர் சி லே அவுட்) பகுதியில் நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் , பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து செயல்முறை விளக்கம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    • ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தலைமை தாங்கினார்.

    விழாவில், இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சிவக்குமார், தே.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சித்ரா, மற்றும் உறுப்பினர்கள் வனிதா,தொரை,காமராஜ்,சிவசுப்ரமணியம்,சந்தோஸ்,சரோஜா,லட்சுமி,சாரதா, ஜெயபால்,தமிழ்வாணி,தர்மராஜ்,பாலகிருஷ்ணன்,கல்பனா,பிரேமா,ஷீலாராணி,அஞ்சலி,லட்சுமி,கிட்டான்,ஷகிலா,ராஜா மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்த முடிவு
    • மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாதம் தோறும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் தீவிர துப்புரவு இயக்கம் மேற்கொண்டு அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி நாளை தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடந்தது. தூய்மைப் பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோலப் போட்டி, வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகம் அடங்கிய போஸ்டர் உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.

    • இருமுறை ட்ரோன் மூலம் தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே.
    • நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.

    அவிநாசி :

    வயல் விழா மூலம் நானோ யூரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு மேல் உரமாக இடக்கூடிய சாதாரண யூரியாவுக்கு மாற்றாக நானோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கலாம். ஒரு பாட்டில் திரவ நானோ யூரியா (500 மி.லிட்.,)125 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு ஏக்கருக்கு சாதாரண விசை தெளிப்பான் மூலம் 20 மற்றும் 40 நாள் பயிர்களில் தெளிக்க வேண்டும்.

    ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு அதே அளவு திரவ நானோ யூரியாவை30 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரு முறையாக, வெறும்ஐந்து நிமிடங்களில் ஒரு ஏக்கர் முழுக்க தெளித்து விடலாம்.இருமுறை ட்ரோன் மூலம்தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே. இதன் மூலம்கூலியாட்கள் பற்றாக்குறை முற்றிலும் தவிர்க்கப்படும்.சாதாரண யூரியா பயன்படுத்தப்பட்ட நிலங்களை காட்டிலும், நானோ யூரியா பயன்படுத்தப்பட்ட நெல் வயல்களில், 400 முதல் 500 கிலோ மகசூல், வைக்கோலில் ஆயிரம் கிலோ மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. அதன்படி, நானோ யூரியா தெளிக்கப்பட்ட நெல் வயல்களில் ஒரு எக்டருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.அத்துடன் மேல் உரமாக இடக்கூடிய, 50 சதவீதம் சாதாரண யூரியாவை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.
    • விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக கொடுத்தனர்.

    கோவில்பட்டி

    தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சிவலார் பட்டி மற்றும் வெம்பூரில் கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் மண் மாதிரி மற்றும் பாசன நீர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கல்பனா தேவி தலைமை தாங்கினார். மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி செயல் விளக்கத்தை பற்றி கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனையின் மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி விளக்கி கூறினார்.

    கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துக் கொடுத்தனர். முகாமில் புதூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊட்டியில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

    ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னா் அவா் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு உயா்கல்வி பயில 7.5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உயா் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

    அத்துடன் தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியா்களை கொண்டு மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. ெகாரோனா தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டம் வாயிலாக மாணவா்கள் புரிந்துணா்வு–டன் படிக்கவும், அடிப்படை கணிதத் திறன்களை வளா்க்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாலை நேரங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மூலம் மாணவா்களின் வீடுகளுக்கு அருகிலேயே தன்னாா்வ–லா்களை கொண்டு வகுப்பு நடத்தப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகள், விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், மடிக்க–ணினிகள், மிதிவண்டி, சீருடைகள், பஸ் பயண அட்டை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, சத்துணவுடன் முட்டை போன்றவை வழங்கப்பட்டு, மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதும், கல்வி கற்கும் முறையும் ஊக்குவிக்கப்படுகிறது.

    எனவே பெற்றோா்கள் தங்களது பள்ளி வயது குழந்தைகள் அனைவ–ரையும் அரசுப் பள்ளிகளில் சோ்த்து அரசால் வழங்கப்ப–டும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியானது சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற–டைந்த–து. சுமாா் 75 ஆசிரி–யா்கள் விழிப்பு–ணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்டக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×