குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு
Published on

ஊட்டி:

குன்னூர் நகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு சார்பாக, தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது எவ்வாறு என்று செய்முறை விளக்கமும் மாணவ- மாணவிகளிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்பத்தப்பட்டது.

என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணர்வும் மற்றும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com