என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Voter ID card"
- நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
- அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம்.
வாக்காளர்கள் ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை எடுத்துச் செல்லலாம். அதன் விவரம் வருமாறு:-
1. ஆதார் அட்டை
2. பான் அட்டை
3. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை
4. வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய புத்தகம்.
5. தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை.
6. ஓட்டுனர் உரிமம்.
7. பாஸ்போர்ட்
8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை.
9. மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான அட்டை.
10. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை.
- வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது.
- புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:
1. ஆதார் அட்டை
2. பான் கார்டு
3. ரேஷன் அட்டை
4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்
5. ஓட்டுநர் உரிமம்
6. பாஸ்போர்ட்
7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்
8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை
10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்
11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது.
- வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
சென்னை:
பாராளுமன்றத் தோ்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவை எவை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த தோ்தல்களைப் போலவே, வரும் பாராளுமன்ற தோ்தலிலும் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையுடன் சோ்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.
அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்த லாம்.
அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக வாக்காளா் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டு வினியோகிக்கப்படும்.
வாக்குச் சாவடியில் வாக்காளா் தகவல் சீட்டைக் காண்பித்து வாக்களிக்க முடியாது. அது அடையாள ஆவணம் இல்லை. ஒரு வாக்காளா் வேறொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கலாம். அந்த அடையாள அட்டையையும் இந்திய தோ்தல் ஆணையத்தின் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயா் வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
- அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
சென்னை:
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதின்று வெளியிட உள்ளது.
அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும்-திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுயிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.
நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 1-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
- சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.
துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.
இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.
கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
- முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
- வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும்.
சென்னை:
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும். பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளேயே ஒட்டப்படும்.
அடையாள அட்டையின் முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும். போலியான அட்டைகளை உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
- 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சென்னை:
ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.
- முகாமில் மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைனிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தேர்தல் பிரிவு அலுவலக–ங்களில் நடந்து வருகிறது.
இது தவிர கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளிலும், இதுபோல் 26 மற்றும் 27-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்க ளில் வாக்காளர் சேர்தல், நீக்கல் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 43,958 விண்ணப்பங்கள் நேரில் பெறப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 13,679 விண்ணப்பங்கள் என மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்களில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 779 வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து ள்ளனர் என்றனர்.
- புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
- இதைத்தொடர்ந்து நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ. பண்ணாரி மற்றும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையில் ஆதார் எண் இணைக்கப்படும் என தெரிவித்தனர்.
- வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவம் வினியோகிக்கப்பட்டது. இவற்றை பரமத்தி வேலூர் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலர் விஜயகாந்த் ,வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராஜா ஆகியோர் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
எனவே, வாக்காளர்கள் தாமாகமுன்வந்து தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமு கப்படுத்தப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்து தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகத்திலும் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் இணைத்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.
வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் லட்சுமி. கிராம நிர்வாக அதிகாரி செல்வி .ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
- 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும். வருகிற 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தியும் விபரம் இணைக்கப்படும்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு, வீடாக சென்று விபரம் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பவாக்காளரின் ஆதார் விவரங்களை
இணைக்கும் திட்டம்
விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை.
- இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் கமிஷனிடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் அலுவலர்களிடம் பகிர்கொள்ளப்பட்டன.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 23-ம் பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி வாக்காளர் பதிவு விதிகளில் 26 பி என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்து, வக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு அலுவலரிடம் 6பி விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம்.
இந்த திட்டத்தின் நோக்கம் தற்போது சட்டமாக்கப்பட்டு இருப்பதால், ஆதார் எண்ணை வாக்காளர்கள் தானாக முன்வந்து அளிக்க வேண்டும். நேரடியாக ஆதார் எண்ணை அளிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை 1.4.2023 தேதிக்குள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்