search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
    X

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

    • தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
    • 6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சென்னை:

    ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த வாக்காளர்களின் ஆதார் எண்ணை முழுமையாக இணைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன், தனியார் 'நெட்சென்டர்' இ-சேவை மையங்கள் மூலமாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    6 கோடி வாக்காளர்களில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இந்த பணியை வேகப்படுத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    இதுபற்றிய விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி இந்த பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்குமாறு சத்யபிரதாசாகு கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×