search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Yellow Bag"

  • திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது.
  • முகாமில் அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.

  திசையன்வினை:

  திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு முகாம் நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்று பேசினார்.

  முகாமில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து வைப்பதற்கு வசதியாக குப்பை தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பஜாரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

  முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பஞ்சாயத்து செயலர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர்.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

  திருப்பூர்:

  தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் நம் பூமியில் முதலீடு செய்யுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் நெகிழி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

  மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் மக்களிடம் நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை, இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், மூட்டை மற்றும் பொட்டலம் கட்டுவதற்கு நெகிழி பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது, உங்களுக்கே அது ஆபத்தை விளைவிக்கும், வீணாகும் உணவு மற்றும் காய்கறிகளை நெகிழி பைகளில் அடைத்து தூக்கி போடக்கூடாது, விலங்குகள் அதை சாப்பிட்டால் குடலடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும், எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்லுங்கள், மலை மற்றும் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது நெகிழி பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனசரகத்திற்குள் தூக்கி போடக்கூடாது, அது தீமைகளை விளைவிக்கும்.

  நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர். பிறகு 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்தும், மஞ்சப்பைகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

  • சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

  சிவகங்கை

  சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

  சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

  நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
  • நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.10 நாணயம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் தானிய இயந்திரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று துண்டு பிரசவங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  அதனை தொடர்ந்து நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி வணிகர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

  தஞ்சாவூர் மாவ ட்டத்தி லுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கள் , தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

  தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  காங்கயம் :

  திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிவன்மலை கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப–பட்டது.

  நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்திரன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி , துணை தலைவர் சண்முகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காங்கயம் அரசு கலை கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது.
  • பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமேஷ் பாபு முன்னிலை வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பரமத்தி சட்டப் பணிக்குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பிரபாகரன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  அப்போது நீதிபதிகள் பேசும்போது, பரமத்தி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை வாங்கி கொண்டு சென்று சாப்பிடும் போது மனிதனின் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். பிளாஸ்டிக் பைகள் கால்வாய் மற்றும் ஆறுகளில் தண்ணீரில் மிதந்து செல்லும்போது கால்நடைகள் தண்ணீரை குடிக்கும் போது தண்ணீரில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பைகள் கால்நடையின் உடலுக்குள் சென்று கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசி வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் .

  அதே போல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் வழக்கறிஞர்கள், வார்டு கவுன்சிலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை செய்தார்.

  • பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
  • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.

  உடுமலை :

  உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கேரள மாநிலம் மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.மலைமேலுள்ள தீர்த்த கிணற்றில் நீர் எடுத்து அவுல், பச்சரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

  மலையடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக வரிசை தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்திலேயே, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை மற்றும் காகித பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • அமைச்சா் ராமசந்திரன் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
  • நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  ஊட்டி 

  நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.

  இதில் வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தன்.

  நிகழ்ச்சியில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, இதனை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

  இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பிறதுறைகள் மூலமும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளது. நெகிழி இல்லா நீலகிரி மாவட்டமாக தொடா்ந்து நீடிக்க அனைத்து துறை அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, நகா்மன்ற தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகீம் ஷா, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, ஊட்டி நகராட்சி ஆணையா் காந்திராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், சுனிதா நேரு, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

  • பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர்.
  • பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி காலில் சக்கரம் மாட்டி சென்றனர்.

  பேராவூரணி:

  பேராவூரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் விழிப்பு ணர்வு பேரணியை அட்லா ண்டிக் பன்னாட்டு பள்ளி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிலம்புச்செல்வன் தலைமையில் புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி சேதுசாலை, அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக நகரின் முக்கிய வீதியில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

  பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர். பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சாமியப்பன், நிமல் ராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அருகில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றினர். பேரணியில் மாணவர்கள் காலில் சக்கரம் மாட்டி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைபொது மக்களிடம் வழங்கினர். 

  • சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
  • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  சிவகிரி:

  சிவகிரி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியும், துணிப்பைகளை (மஞ்சப்பை) பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், பேரூர் கழக செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் விவேகா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி வலம் வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

  பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் (மஞ்சப்பை) துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தி பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், 18 வார்டு கவுன்சிலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.