நீலகிரி பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள்

அமைச்சா் ராமசந்திரன் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீலகிரி பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக  நீடிக்க  மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள்
Published on

ஊட்டி 

நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.

இதில் வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தன்.

நிகழ்ச்சியில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, இதனை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பிறதுறைகள் மூலமும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளது. நெகிழி இல்லா நீலகிரி மாவட்டமாக தொடா்ந்து நீடிக்க அனைத்து துறை அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, நகா்மன்ற தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகீம் ஷா, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, ஊட்டி நகராட்சி ஆணையா் காந்திராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், சுனிதா நேரு, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com