search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness"

    • விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி கமிஷனர் பிரதீப் கலந்து கொண்டார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி கமிஷனர் பிரதீப் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் முருகவேல், ஆசிரியர்கள், காவல்துறையினர்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகளும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிெமாழி ஏற்றனர்.

    பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிவகலை மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து,சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    • பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முன்னதாக ஆசிரியர் மாரி தங்கம் வரவேற்றார். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அழகு மகேஸ்வரி, ஏஞ்சல் மலர் மெரினா, அழகு மகேஸ்வரி, அமுதா ராணி, சிவகாமி, வர்மா, பெர்ஜிலின். கவிதா, அருணா, குருவம்மாள், ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் சகாயம் நன்றி கூறினார்.

    • சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.

    எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது.
    • சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை 3 தினங்கள் மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்றும் நேற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

    மேலும் 75-வது சுதந்திர தின விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா படகு இல்லத்தில் குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது. மாணவிகள் நடனமாடிய படி தேசிய கொடியை ‌ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சுற்றுசூழல் பாதுகாப்பு, தேசப்பற்று குறித்து மாணவிகளின் எடுத்துரைத்தனர். இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்கள் போதை பொருள், கஞ்சா மற்றும் செல்போன் உபயோகம் செய்யகூடாது. மேலும் தவறான நபர்களிடம் பழக கூடாது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்த விழிப்புணர்வு முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் சாலமோன் வரவேற்று பேசினார்.சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி மற்றும் சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார். மாணவர்கள் போதை பொருள், கஞ்சா மற்றும் செல்போன் உபயோகம் செய்யகூடாது. மேலும் தவறான நபர்களிடம் பழக கூடாது.குழந்தை திருமணம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.தமிழ்நாட்டில் சிறார் அதிக அளவில் குற்ற சம்பவங்களில் நடைபெறும் இரண்டாவது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்கிறது என கூறினார்.

    மேலும் சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் முனியசாமி மாணவர்களிடம் 18 வயது நிரம்பிய பிறகு லைசென்ஸ் எடுத்த பின்னர் வாகனங்கள் ஒட்டவேண்டும்.குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் ஏற்பாடு செய்து இருந்தார்.

    • தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    உயர்கல்வி துறை அறிவுறுத்தலின் படி 75வது சுதந்திர தினத்தை (பவள விழா) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக வீடுவீடாக சென்று பவளத் தினத்தை பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சி அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குடிசைப் பகுதியில் வீடுவீடாக சென்று வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விடுவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும் கொடி காத்த திருப்பூர் குமரனின் புகைப்படத்தை‌ கையில் ஏந்தியபடியும், தேசிய கொடியை எடுத்துக்கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார் ஆகியோர் தலைமையில் 18க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
    • தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, நூலகர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இது குறித்து, மாவட்ட நூலக ஆணைக்குழு வாயிலாக நூலகர்களுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டுதல்கள் வருமாறு:-

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 13ந் தேதி முதல் 15 ந் தேதி வரை,நூலகங்களில், தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.தேசியக்கொடி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதற்காக, ஊராட்சித்தலைவர்களுடன் திட்டம் குறித்த ஆலோசனை நடத்தி சிறப்பு கூட்டங்கள் வாயிலாக அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.நூலகப்பணியாளர்கள், நூலகத்திலும், வீடுகளிலும், தேசியக்கொடி ஏற்றி, அதன் விபரங்களை,நூலக ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாசகர் வட்டம் வாயிலாக தேசியக்கொடி திட்டத்தை விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • விழிப்பு–ணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    போதைப்பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பெற்றோர்களுடன் இணைந்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறைகள் நடத்திடவேண்டும்.

    இந்த நிகழ்ச்சிகளில் உடல்நிலை, சட்டம், உளவியல் நடவடிக்கைகள், உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில் விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பள்ளிகளுக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்திடவேண்டும்.

    மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதைப்பொருட்கள் விற்பனை சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், போதைமருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க அறிவுறுத்த வேண்டும்.

    போதைப்பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த மையத்தில் மருத்துவர்கள், உளவியல் டாக்டர் உள்ளிட்டவர்களை கொண்டு போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இந்தகுழு ஒருங்கிணைத்து செயல்பட்டு, போதைப் பொருள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திடதேவையான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் தலைமையிலும் தென்காசி வேளாண்மை வணிக வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை முன்னிலையில் நடைபெற்றது.
    • உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் விளக்கிக்கூறினார்

    தென்காசி:

    உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் கடையநல்லூர் வட்டாரம் கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடிகுறிச்சி மற்றும் சிவராமபேட்டை விவசாயிகளுக்கான உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கிருஷ்ணகுமார் அறிவுரைப்படி தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் தலைமையிலும் தென்காசி வேளாண்மை வணிக வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை முன்னிலையில் நடைபெற்றது.

    கடைய நல்லூர் வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் கருப்பையா வரவேற்று பேசினார். வேளாண்மை வணிகம் வேளாண்மை அலுவலர் முகைதீன்பிச்சை விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து லாபம் பெறவும் வேளாண் வணிக திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.

    முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும் தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன் விளக்கிக்கூறினார்.உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் விளக்கிக் கூறினார்.

    தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் பயிர்பாதுகாப்பு செய்யும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். நிறைவாக செங்கோட்டை வேளாண்மை வணிக உதவி வேளாண்மை அலுவலர் இப்ராஹிம் நன்றி கூறினார்.


    • தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை வாழை இலை, உலோகத்தாலான குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்,திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பல்லடம் நகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் கடை வீதியில், பிளாஸ்டிக் பைகளை கொண்டுவந்தவர்களிடம், அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இனி இதுபோல பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனிதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர், மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
    • மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
    • நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    பேரணிக்கு உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி மாணிக்கம் வீதி வித்யாசாகர் கல்லூரி ராஜேந்திரா சாலை வழியாக நுண்ணுயிர் உரக்கிடங்கை அடைந்தது. அங்கு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் நகர் அலுவலர் கௌரி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ஆறுமுகம், ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×