search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission"

    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
    • 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

    இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன.
    • இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையங் களில் அரசு ஒதுக்கீட்டிற் கான இடங்களுக்கு, சேர்க்கை விவரங்கள் ஜூலை 10-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் முன் கூட்டியே கடந்த 4-ந் தேதி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப் பதாரர்களும் தங்களது தற்காலிக ஒதுக் கீட்டிற்கான விவரத்தை மேற்கண்ட வெப்சைட்டில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையதற்திற்கு நேரில் சென்று, தற்காலிக ஒதுக் கீட்டு கடிதத்தை பெற்று, அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம் செலுத்தி, சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

    இதற்கான கடைசி தேதி வரும் 12-ந் தேதி (நாளை) ஆகும். மேலும் விவரங் களுக்கு கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையத்தை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    • இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.
    • சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் 20, 22-ந்தேதிகளில் நடத்தப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர்.

    இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.

    தனித்தனி விண்ணப்பம்

    எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரி இணைய தளத்தில் விண்ணப்பித்து, கல்லூரி முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

    • மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    • இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலாண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்று விக்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்பு

    கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்னும் 4 ஆண்டு பி.டெக். பட்டப் படிப்பு தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி வழங்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்ற இப்புதிய பாடத்திட்டம் தற்காலத்தில் மிக முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையாகும். மேலும் இது தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி ஆகும்.

    ஆற்றல்மிக்க லாபகரமான தொழில்நுட்ப துறையில் ஒன்றாக உருவெடுத்துள்ள இத்துறை பெரும்பாலும் நடைமுறை மற்றும் பயன்பாட்டு அடிப்ப டையிலான திறன் சார்ந்த ஆய்வை அடிப்படையாக கொண்ட படிப்பு ஆகும். புள்ளியியல், கணித பகுத்தறிவு, எந்திரம் கற்றல், காட்சிப்படுத்துதல், திறன் மற்றும் அறிவைக் கண்டறிதல் முதலிய வற்றுக்கும் நிஜ உலக சவால்களை தீர்ப்பதற்கும் இப்படிப்பு பயன்படுகிறது. மேலும் இதன்மூலம் தரவு விஞ்ஞானம், தரவு செயல்பாடு, தரவுக்கிடங்கு முதலிய பணிகள் மேற்கொ ள்ளப்படுகின்றன. இப்படி ப்பில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம்.

    ஆராய்ச்சி மையம்

    இக்கல்லூரி டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்றி தழை பெற்றிரு க்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்து றைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரி க்கப்பட்டு உள்ளது. மேலும் கணினி துறை, மின்னணு வியல் மற்றும் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்தி ற்கான அங்கீகா ரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்கி உள்ளது.

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கு வதுடன் வேலை வாய்ப்பு களை பெற்று தரும் வகையில் பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய துறைசார்ந்த அறிவு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற திறனை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கிறது.

    வேலைவாய்ப்பு

    மாணவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஆண்டுதோறும் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாள ர்களை அழைத்து கருத்த ரங்கு நடத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவன ங்களில் இறுதி யாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்று ள்ளனர்.

    கல்லூரியில் மாணவர் களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதி களுடன் உள்ளது. மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணைய தள சேவை வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாண வர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இக்கல்லூ ரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.

    கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

    • 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.
    • அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும், தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற இருக்கிறது.

    இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவிகள் வரும் 15-ம் தேதி வரை www.https://scert.tnschool.gov.in

    என்ற இணையதள முகவரியில் விண்ணப்பி க்கலாம்.

    அவ்வாறு இணையத ளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும், அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள்.
    • 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரமாண்டமாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு மற்றும் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பு இருக்கும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் 29-ந் தேதி வந்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் விதம், ஆய்வகம், மருத்துவ மாணவர்களுக்கான வசதிகள், விடுதி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் நோயாளிக–ளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

    குறிப்பாக அனைத்து மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் திருப்திகரமான முறையில் தேசிய மருத்துவ ஆணைய குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான 100 மருத்துவ இடங்கள் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் பேட்ஜ், 2022-23-ம் ஆண்டு 2-வது பேட்ஜ் என்ற நிலையில் வருகிற 2023-24-வது ஆண்டு 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதுபோல் 2022-23-ம் ஆண்டு அங்கீகாரம் முதல் தடவை புதுப்பிக்கப்பட்டது என்றும், தற்போது 2-வது ஆண்டாக அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும் ஏற்கனவே படித்து வருபவர்களுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு கிடைத்துள்ளதால் மருத்துவத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி' பிளஸ் சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

    இளங்கலை கல்வியியலில் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், செடி உயிரியல், உயிர் தொழில்நுட்பம்), பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் இயற்பியல், பயன்பாட்டு வேதியியல்), வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம் மற்றும் பொருளறிவியல் பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவர்.

    திறமை வாய்ந்த பேராசிரியர் குழு

    பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    வளாகத் தேர்வு

    மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) பயிற்சியும், ஆராய்ச்சி கல்விக்கான (NET) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
    • குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூர் நகரில் ஓட்டுப்பட்டறை சுற்றுவட்டார பகுதிகளில் 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கிளை செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    சாம்பவர் வடகரை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின் பேரில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டா குளத்தில் மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் கொட்டாகுளம் கணேசன், மாவட்ட செயலாளர் முருகன், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கொட்டாகுளம் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோவிலில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கணேசன் நாடார், சங்கரலிங்க நாடார், சுப்பிரமணிய நாடார், நல்லமுத்து ராசையா நாடார், சுவாமிதாஸ் நாடார், அருணாச்சலம் நாடார், பழனிச்சாமி நாடார், இசக்கி நாடார், துரைராஜ் நாடார், முத்தையா சாமி நாடார், காளிதாஸ் நாடார், முருகையா நாடார் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி  ஒட்டப்பட்டது.

    தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத  இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில்    தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார்  அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக  பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.  ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால்  பள்ளி கல்வித்துறை சார்பில்  பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க  ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

    காலை 10 மணி அளவில் வகுப்பறையில்  வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில்  அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று  பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு  மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில்  குலுக்கல்  நடைபெற்றது.

    பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு   செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.  மேலும் இந்த தேர்வு  பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில்   ஒட்டப்பட்டது.  மேலும் உடனுக்குடன்  இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை   வழங்கப்பட்டது.
    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய விபரம், தங்கத்தை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். 

    இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரண கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிற்சி பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

     பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரங்கள்). இந்த பயிற்சியில் சேருவ தற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.  ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கான கட்டணம் ரூ. 4 ஆயிரத்து 543 ஆகும். 

    பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ. 500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டாளர் பெட்டி) இலவசமாக வழங்கப்படும். 

    மேலும் விவரங்களுக்கு முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி. டெப்போ எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 8807159088 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×