என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் நகரில் அ.தி.மு.க சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆய்வு
- 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
- குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஊட்டி,
குன்னூர் நகரில் ஓட்டுப்பட்டறை சுற்றுவட்டார பகுதிகளில் 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கிளை செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story






