search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission"

    • ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
    • வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

    கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தகவல்
    • கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தது. இதில் இடம் கிடைக்காதவர்கள், சமீபத்தில் நடந்த துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த கலந்தாய்வில் மாணவர்கள், பெற்றோருடன் மதிப்பெண் பட்டியல் நகல், மாற்று சான்றிதழ், சாதி, குடியிருப்பு சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

    அதில் 300 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 1-ம் தேதி காலை 9.30 மணிக்கும், 299 முதல் 250 வரை பெற்றவர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும், 249 முதல் 175 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும். குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வரும் 2-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

    • 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
    • நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்

    திருப்பூர்:

    திருப்பூா், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகள், மேம்பட்ட தொழில் நுட்ப படிப்பான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம். ஒரு குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். அரசுப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயின்று இந்தப் பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண்திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாகப் பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ஆகவே, விருப்பமுள்ள மாணவ, மாணவியா் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2429201, 04258 - 230307, 04252 - 22334 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை நடக்கிறது.
    • இத்தகவலை செக்கானூரணி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரீ–சியன், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப் பபடுத்துதல் போன்ற இரண்டு வருட தொழிற் பிரிவுகளுக்கும், வெல்டர், உலோகத்தகடு வேலையாள் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட தொழிற்பி–ரிவுகளில் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு சேர விருப்பம் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை (13.07.2023) முதல் செக்கா–னூரணி அரசு தொழிற்ப–யிற்சி நிலையத்திற்கு நேரடி–யாக வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து கொள் ளலாம்.

    மேலும், இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாண–வர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை–யில்லா மிதிவண்டி, சீருடை–கள், காலணி, வரைபடக்க–ருவிகள், புத்தகங்கள் வழங் கப்படும்.

    மேலும் பயிற்சியா–ளர்க–ளுக்கு மாதம் ரூ.750 உத–வித்தொகை யும், பயிற்சி முடித்த மாணவ ர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு–களில் 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    கூடுதல் விபரங்க ளுக்கு 04549-287224, 96260 67302, 98409 47460, 95669 03149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். இத்த கவலை செக்கானூ ரணி அரசி னர் தொழி ற்ப யிற்சி நிலைய முதல்வர் அசோகன் தெரி–வித்து ள்ளார்.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
    • 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.

    இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன.
    • இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங் கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங் கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையங் களில் அரசு ஒதுக்கீட்டிற் கான இடங்களுக்கு, சேர்க்கை விவரங்கள் ஜூலை 10-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் முன் கூட்டியே கடந்த 4-ந் தேதி வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப் பதாரர்களும் தங்களது தற்காலிக ஒதுக் கீட்டிற்கான விவரத்தை மேற்கண்ட வெப்சைட்டில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு நாமக்கல், கீரம்பூரில் அமைந்துள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையதற்திற்கு நேரில் சென்று, தற்காலிக ஒதுக் கீட்டு கடிதத்தை பெற்று, அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம் செலுத்தி, சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

    இதற்கான கடைசி தேதி வரும் 12-ந் தேதி (நாளை) ஆகும். மேலும் விவரங் களுக்கு கீரம்பூர் அரசு ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிலையத்தை, தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    • இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.
    • சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் 20, 22-ந்தேதிகளில் நடத்தப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர்.

    இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.

    தனித்தனி விண்ணப்பம்

    எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரி இணைய தளத்தில் விண்ணப்பித்து, கல்லூரி முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

    • மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
    • இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்களில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலாண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்று விக்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்பு

    கல்லூரியில் இந்த கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்னும் 4 ஆண்டு பி.டெக். பட்டப் படிப்பு தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அனுமதி வழங்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் என்ற இப்புதிய பாடத்திட்டம் தற்காலத்தில் மிக முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையாகும். மேலும் இது தொழில்நுட்பத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி ஆகும்.

    ஆற்றல்மிக்க லாபகரமான தொழில்நுட்ப துறையில் ஒன்றாக உருவெடுத்துள்ள இத்துறை பெரும்பாலும் நடைமுறை மற்றும் பயன்பாட்டு அடிப்ப டையிலான திறன் சார்ந்த ஆய்வை அடிப்படையாக கொண்ட படிப்பு ஆகும். புள்ளியியல், கணித பகுத்தறிவு, எந்திரம் கற்றல், காட்சிப்படுத்துதல், திறன் மற்றும் அறிவைக் கண்டறிதல் முதலிய வற்றுக்கும் நிஜ உலக சவால்களை தீர்ப்பதற்கும் இப்படிப்பு பயன்படுகிறது. மேலும் இதன்மூலம் தரவு விஞ்ஞானம், தரவு செயல்பாடு, தரவுக்கிடங்கு முதலிய பணிகள் மேற்கொ ள்ளப்படுகின்றன. இப்படி ப்பில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம்.

    ஆராய்ச்சி மையம்

    இக்கல்லூரி டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஓ. 9001:2015 தரச்சான்றி தழை பெற்றிரு க்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்து றைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும், முதுநிலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரி க்கப்பட்டு உள்ளது. மேலும் கணினி துறை, மின்னணு வியல் மற்றும் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்தி ற்கான அங்கீகா ரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்கி உள்ளது.

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கு வதுடன் வேலை வாய்ப்பு களை பெற்று தரும் வகையில் பிரத்யேகமான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய துறைசார்ந்த அறிவு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற திறனை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கிறது.

    வேலைவாய்ப்பு

    மாணவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஆண்டுதோறும் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாள ர்களை அழைத்து கருத்த ரங்கு நடத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவன ங்களில் இறுதி யாண்டு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்று ள்ளனர்.

    கல்லூரியில் மாணவர் களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதி களுடன் உள்ளது. மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணைய தள சேவை வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாண வர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இக்கல்லூ ரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.

    கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய விபரம், தங்கத்தை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். 

    இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரண கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிற்சி பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

     பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரங்கள்). இந்த பயிற்சியில் சேருவ தற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.  ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கான கட்டணம் ரூ. 4 ஆயிரத்து 543 ஆகும். 

    பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ. 500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டாளர் பெட்டி) இலவசமாக வழங்கப்படும். 

    மேலும் விவரங்களுக்கு முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி. டெப்போ எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 8807159088 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×