search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை
    X

    கலெக்டர் சாருஸ்ரீ

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

    • ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
    • வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

    கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×