என் மலர்

  நீங்கள் தேடியது "NCP"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
  புதுடெல்லி:

  பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
   
  இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  51 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை தாண்டியுள்ளதும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

  பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

  இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுதொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் தரும் ஆதரவால் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. #FuelPrice #BharatBandh #NCP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
  மும்பை :

  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

  இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாயை அளிப்பதாக அறிவித்துள்ளது.

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த பாட்டீல் கூறுகையில், வெள்ள பாதிப்புக்கு இலக்கான கேரளா மாநிலத்துக்கு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசு கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #NationalistCongressParty
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மக்கள் விரும்புவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். #SharadPawar #NCP
  மும்பை :

  மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- 

  இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். பாகிஸ்தான் என்றால் என்ன? நமக்கும் பாகிஸ்தானுக்கும் இன்று பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது தான் பாகிஸ்தான். 

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நான் பதவி வகித்த போது பலமுறை பாகிஸ்தானுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பாகிஸ்தான் மக்களிடம் பலமுறை நான் கலந்துரையாடியுள்ளேன்.

  அவ்வாறு, நான் கலந்துரையாடிய ஒவ்வொரு முறையும் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புவதை உணர்ந்தேன். பாகிஸ்தானியர்கள் பலரின் சொந்த சகோதர சகோதரிகள் உத்திரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். ஆனால், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றமான சூழல் காரணமாக அவர்கள், ஒருவரை ஒருவர் சுலபமாக சந்தித்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். 

  எனவே, சிறுபான்மையினர் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என கூறுபவர்களுக்கு இந்தியாவை பற்றியும் தெரியாது, பாகிஸ்தானை பற்றியும் தெரியாது. இந்த நிலையில் தான் அவர்கள் அவ்வாறு முழக்கமிட்டு வருகிறார்கள். 

  இவ்வாறு அவர் தெரிவித்தார். #SharadPawar #NCP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க.வில் இணைவதற்காக பலர் காத்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார். #DevendraFadnavis #BJP #NCP
  மும்பை:

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நிரஞ்சன் தேவ்கர்கே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று பா.ஜ.க. கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்:-

  நிரஞ்சன் தேவ்கர்கேவின் தந்தை வசந்த் தேவ்கர்கே மிகச்சிறந்த அரசியல் தலைவரும் சமூக ஆர்வலரும் ஆவார். நிரஞ்சன் தேவ்கர்கே பல வருடங்களாக எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு பா.ஜ.க.வில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

  பா.ஜ.க.வின் மத்திய தலைவர்களுக்கான தேர்தலுக்கு நிரஞ்சன் தேவ்கர்கேவின் பெயர் பரிந்துரை செய்யப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க. மிகச்சிறிய கட்சியாக இருந்தது. அது படிப்படியாக வளர்ந்து தற்போதைய உயரத்தை எட்டியுள்ளது.

  பா.ஜ.க. கட்சியில் இணைவதற்காக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வரிசையில் காத்திருக்கின்றனர், அவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

  பின்னர் பேசிய நிரஞ்சன் தேவ்கர்கே, மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் என்னுடைய கோரிக்கைகளை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிறைவேற்றியுள்ளார் எனவும் தெரிவித்தார். #DevendraFadnavis  #BJP #NCP
  ×