search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபுல் பட்டேல்"

    • 2017-ல் ஏர் இந்தியா குத்தகை தொடர்பாக முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு.
    • பிரபுல் பட்டேலுக்கு எதிராக குற்றச்சாட்டில் தவறு செய்ததற்கான ஆதாராங்கள் இல்லை.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் பிரபுல் பட்டேல். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தபோது, ஏர்இந்தியா விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் ஏர்இந்தியாவுக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டது. தனியார் நபர்கள் அதிக லாபம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு பிரபுல் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தவறாக செயல்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதனால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதா? அல்லது விசாரணையை தொடர உத்தரவிடுமா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரியும்போது பிரபுல் பட்டேல் அஜித் பவார் பக்கம் சென்றார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் வசம் ஆனது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசில் பங்கேற்றுள்ளது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. பா.ஜனதா பக்கம் வந்த உடன் சிபிஐ வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    ஏற்கனவே பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் வாஷிங் மெஷின் என்று அழைத்து வருகின்றன. கரைபடிந்தவர்கள் பா.ஜனதா பக்கம் சென்ற பிறகு தூய்மையடைந்து விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    • சரத் பவார் கட்சி சார்பில் பதவி நீக்கம் செய்ய மனு.
    • பதவி இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் பட்டேல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி.யாக ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியில் தனக்கென்று ஒரு அணியை பிரித்துக் கொண்டு செயல்பட்டார்.

    கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் தன்னுடன் இருப்பதாக கூறிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சில மாநில மந்திரியாக பதவி ஏற்றனர்.

    அஜித் பவாருடன் பிரபுல் பட்டேல் இணைந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கே சொந்தம் என அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சபாநாயகரும் அதை உறுதிப்படுத்தினார்.

    இந்த நிலையில்தான் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரா பவார் கட்சியை தொடங்கினார். சரத் பவார் பிரபுல் பட்டேலை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் மனு அளித்திருந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரபுல் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அதேவேளையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட இருக்கிறார். அம்மாநிலத்தின் வந்தனா சவான் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு பிரபுல் பட்டேல் போட்டியிட இருக்கிறார்.

    அரவது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்கான இடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

    • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பு
    • டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்பு

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.

    அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள்.

    நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.

    அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ''நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்'' என்றார்.

    திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

    சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.

    • பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.

    அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

    பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார்.
    • வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரை அறிவித்தார். தேர்தல் பணி, மாநிலங்களவை, மக்களவை பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுப்ரியா சுலேவை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் சரத் பவார் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும். 

    சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா, மாநிலங்களவையின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார். அதேசமயம், அவரது அண்ணன் மகனும் மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அவரது முன்னிலையிலேயே புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×