search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani Enterprises"

    • அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது
    • 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 சரிந்து, 21,997 புள்ளிகளுடனும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் இன்று ஒரே நாளில் ₹90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனெர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனெர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது.

    அதானி எண்டர்பிரைசஸ் 5.5% சரிவையும், அதானி போர்ட்ஸ் 5.3% சரிவையும் கண்டுள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் 4 முதல் 7 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

    இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளது. இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ. 15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.டி. டிவியின் குறிப்பிட்ட அளிவலான பங்குகளை ஏற்கனவே வாங்கியுள்ளது.
    • வணிகம் மற்றும் நிதி தொடர்பான சேனலை கடந்த வருடம் வாங்கியது.

    இந்தியாவில் உள்ள முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக அதானி திகழந்து வருகிறார். அம்பானி குழுமத்திற்கு எதிராக அதானி குழுமம் எல்லாத்துறைகளிலும் கால்பதித்து கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

    அதானி குழுமம் மீடியா துறைகளில் ஆதிக்கம் செலுத்த ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறது.

    இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்.டி. டிவியின் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கியது. டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பி.க்யூ. பிரைம் என்ற வணிகம் மற்றும் நிதி தொடர்பான செய்தி சேனலை குயின்டில்லியன் மீடியாவிடம் இருந்து வாங்கியது.

    இந்த நிலையில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்தில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பது முதல் நீக்குவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் அதானி குழும நிறுவனத்தில் மேற்கொள்ள முடியும்.

    இந்த நிறுவனத்தின் வருமானம் 2021 நிதியாண்டில் 10.3 கோடி ரூபாயாகவும், 2022 நிதியாண்டில் 9.4 கோடி ரூபாயாகவும், 2023 நிதியாண்டியில் 12 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.என்.எஸ். அல்லது இந்தோ-ஏசியன் நியூஸ் சர்வீஸ் 1986-ல் வடக்கு அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து அங்கு வாழும் இந்திய சமூதாயத்தினருக்காக தொடங்கப்பட்டது. பின்னர் 1970 இந்தியா, தெற்கு ஆசியாவில் கவனத்தை செலுத்தி முழு நேர செய்தி சேனலாக மாறியது.

    • ரூ.2.5 லட்சம் கோடி அதானி குழுமம் வருவாய் ஈட்டி வருகிறது
    • பொதுமக்கள் பாக்கெட்டிலிருந்து பணம் கையாடப்பட்டு வருகிறது

    குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த கவுதம் அதானி (61).

    உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.

    இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார்.

    இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், "அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:

    நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை பாதுகாக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை பாதுகாத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ×