search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "absconding"

    • விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
    • இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மும்பையில் நேற்று (மே 13) வீசிய பலத்த காற்றால் ராட்சத விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையத்தின் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 74 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பெட்ரோல் நிலையம் அருகே சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒதுங்கியிருந்தன. அந்த சமயத்தில் அருகில் நிறுவப்பட்டிருந்த ஈகோ மீடியா என்ற நிறுவனத்தின் 250 டன் எடை கொண்ட விளம்பரப் பலகை விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

     

    விளம்பரப் பலகை அமைக்கப்பட்டிருந்த இடம் ரயில்வே காவல்துறைக்கு சொந்தமான இடம் என்றும் , உரிய அனுமதி இன்றி அந்த பலகை அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஈகோ நிறுவனத்தின் இயக்குனர் பாவேஷ் தலைமறைவாகி உள்ளார். இந்தநிலையில், அந்த விளம்பரப் பலகையை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்றே குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக ஒரு வருட காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே அரசின் அலட்சியத்தாலேயே 14 உயிர்கள் பலியாகி உள்ளதாக பலரும் கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று ஈகோ நிறுவனம் விபத்து ஏற்படுத்திய ராட்சதப் பலகையை விபளமபரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
    • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

    அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அடிதடி வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்த தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காட்டாண்டிக்குப்பம் பூவராகவமூர் த்தி(35),மாளிகம்பட்டு மணிகண்டன். இவர்கள் அடிதடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இவர்கள்மீதானவழக்குவிசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இவர்கள் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்த வேண்டும் என வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன்ஆகியோர் இவர்களை கைது செய்து பிடியானை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜெபராஜ் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
    • விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெபராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    சாத்தான்குளம்:

    நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் சப்பாணி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (வயது 26). இவர் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.

    கொலை முயற்சி வழக்கு

    இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கும், சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெரு பேச்சிமுத்து (47) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பேச்சிமுத்துவை ஜெபராஜ், அரிவாளால் வெட்டியதுடன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் ஜெபராஜ் மீது கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜெபராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    கைது

    இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப டுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெபராஜை தேடி வந்தனர்.

    இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    • மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.

    இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அய்யம்பேட்டை கிரா மத்தில் பச்சைவாழியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பெரிய மணியை வீரசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ஏழுமலை (வயது 50). நடுத்தெருவை சேர்ந்த அய்யனார் மகன் சுரேஷ் (20) ஆகியோர் ஆஷா பிளேடால் அறுத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோவிலில் வந்து பார்த்தபோது 2 பேரும் கோவில் மணியை திருட முயன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பொது மக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஏழுமலை என்பவர் பிடிபட்டார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் சுடுகாட்டின் அருகில் 100 நாள் வேளையின் பள்ளம் தோண்டினர். அப்போது இளம்பெண்ணின் உடல் கிடைத்தது. இது தொடர்பான புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையிலான கஞ்சனூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இறந்த பெண் 17 வயதிலிருந்து 19 வயதிற்குள் இருக்கலாம் என்றும், இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்தது. இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், சென்னையில் தலைமறைவாக இருந்து இளம்பெண்ணின் காதலன் அகிலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி அவரது நண்பர் சுரேஷ்குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில்இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் (வயது 21) கஞ்சனூர் போலீசாரிடம் நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அருண் கூறியதாவது:-  இளம்பெண் 3 மாதம் கருவுற்றதால், திருமணம் செய்து கொள்ள அகிலனை வலியுறுத்தினார். அகிலன் திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணை கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றினார். அவர்களுடன் நானும் தனி மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது, இளம்பெண்ணுக்கும், அகிலனுக்கும் அரியலூர் அருகே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அகிலன் இளம்பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இதில் இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அகிலனும், நானும் இளம்பெண்ணின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சுரேஷ்குமார் உதவியுடன் சாலவனூர் சுடுகாடு அருகே புதைத்து விட்டோம். இந்த சம்பவத்தில் அகிலன், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது. அடுத்து என்னை தேடுவார்கள் என்பதால் நானாகவே வந்து சரணடைந்துவிட்டேன் என்று கூறினார்.

    இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கஞ்சனூர் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களில் துப்பு துலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கஞ்சனூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    • 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
    • போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர்.      இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருப்பூர் பெரியாயிபாளையத்தை சேர்ந்த நவீன் ஆனந்த் (வயது 29) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் முகவரியே மாற்றி குடியேறி தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் வடக்கு போலீசார் அருள் புரத்தில் நேற்று நவீன் ஆனந்த்தை கைது செய்து ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
    • இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.

    இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).

    இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×