என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது
- 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
- வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருப்பூர் பெரியாயிபாளையத்தை சேர்ந்த நவீன் ஆனந்த் (வயது 29) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் முகவரியே மாற்றி குடியேறி தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் வடக்கு போலீசார் அருள் புரத்தில் நேற்று நவீன் ஆனந்த்தை கைது செய்து ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Next Story






