என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prosecution"

    • சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
    • சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.

    இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.

    அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • அரியலூரை சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 28 ).

    சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

    சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்திகேயன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அரியலூர் கீழத் தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் ( 28), அரியலூர் வடக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (40) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று விட்டார்.
    • போலீ்சார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் உத்திகை தெருவில் வசிப்பவர் காசிநாதன் மகன் கவியரசன்(வயது 22). டிரைவர்.

    இவர் அதே ஊரில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

    இதனால் இந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார்.

    இது குறித்து பெண்ணை காணவில்லை என பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீ்சார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசனை போலீசார்கைது செய்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய கூலி தொழிலாளர்கள் வயலில் களை எடுத்தல் பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கத்திரிப்புலம் பனையடி குத்தகையில் சரண்ராஜ் என்பவரின் மகன் நாகராஜன் சவுக்கு சாகுபடி செய்து வருகிறார்.

    நேற்று மாலை இந்த சவுக்கு வயலில் களை எடுத்தல் பணி நடைபெற்றது. இதில் நாகக்குடையான் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது இடியுடன் மழை பெய்தது.

    இதில் மின்னல் தாக்கியதில் நாகக் குடையான் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த குஞ்சையன் மனைவி கமலா (45), சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நாகக்குடையான்பகுதியை சேர்ந்த ஆரவல்லி (60), ஜெயலட்சுமி(50), முத்தம்மாள்(50) ஆகிய 3 பேரும் அதிர்ச்சி அடைந்து மயங்கினர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த கரியாபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்னல் தாக்கி பெண் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 59).

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமிக்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கமலநாதன் முடிவு செய்தார்.

    அதன்படி இன்று காலை கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரியில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிள் தஞ்சை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் நிலை தடுமாறி ஜெயலட்சுமி கீழே விழுந்தார்.

    அவர் மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    கமலநாதனுக்கு காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்து கமலநாதன் கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
    • மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். ஜெயராமன், சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் இதுபற்றி செல்போன் மூலம் ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் ஜெயராமனின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த கோவில் பணம் ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு.
    • தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் - திருச்சி சாலையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா தலைமையில் நதியா, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், தனிப்படை சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முதல்நிலை காவலர்கள் புவனேஷ், சிவக்குமார், இரண்டா–ம்நிலை காவலர்கள் வினோத்பாண்டின், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று தனிப்படை போலீஸார் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 கொள்ளையர்களை சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.

    போலீஸார் விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவ பாலகணேஷ் மற்றும் திருச்சி திருவவெறும்பூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.பின்னர் கொள்ளையர்கள் திருடிய கோவில் நகைகள் மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர். இது குறித்து வல்லம் போலீஸார் பாலகணேஷ் (வயது 22), நாகராஜ் (வயது 21) இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பாநாசம் சிறையில் நேற்றிரவு அடைத்தனர்.

    • கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.
    • போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).

    இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்ட தும் சூதாட்டத்தில் ஈடுப ட்டவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த ரூ.1300 பணம் மற்றும் 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் தியாகதுருகம் சந்தை மேட்டு பகுதியை சேர்ந்த சரவணன், நரிக்குறவர் தெருவை சேர்ந்த காமராஜ், கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், சிக்காடு கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை, பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், அந்தியூர் கிராம த்தைச் சார்ந்த ஆலன் மற்றும் சிலர் தப்பி ஓடியது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பிரிட்ஜ் பெட்டியின் கதவு சிறுவன் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.
    • படுகாயமடைந்த சிறுவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26).

    இவரது உறவினர் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், தனது மகன் ஜெகதீஸ்வரன் (2) மற்றும் குடும்பத்தினருடன் கும்பகோணம் வந்து வினோத்குமார் வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி வினோத்குமார் வீட்டில் இருந்த பிரிட்ஜ்க தவை திறந்து ள்ளார்.

    அப்போது அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஜெகதீஸ்வரன் மீது பிரிட்ஜ் பெட்டியின் கதவு பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த ஜெகதீஸ்வரன் மயங்கி விழுந்தான். பின்னர் அவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    ஆனால், போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

    • தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.
    • மகன் ஹர்சனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை புதுநகரை சேர்ந்தவர் ஜான்ராஜ். கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (வயது 22). இவர்களுக்கு 2 வயதில் ஹர்சன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் பல்வேறு சுயஉதவி குழுவிற்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் பலரிடமும் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

    கேட்ட பணம் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த மாலதி மகன் ஹர்சனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேம்பரசி என்பவர் இரவில் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
    • மர்ம நபர்களால் இருவர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    நீடாமங்கலம்:-

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்திற்குட்பட்ட தேப்பெருமாநல்லுரில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மனைவி வேம்பரசி (வயது 49) என்பவர் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்ெதாடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×